29. சமரசத்திற்கு சம்மதிக்காத நேதாஜி

Added : நவ 14, 2021
Share
Advertisement
நேதாஜி தனது அரசியல் குரு மரணமடைந்தபோது சிறையில் இருந்தார். 1926 ஆம் ஆண்டு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சிறையிலிருந்த நேதாஜியை வேட்பாளராக அவரது மாணவர் படையைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். நேதாஜி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். கலவரங்கள் வெடித்தன. மாண்டலே சிறையிலிருந்து நேதாஜி
29.  சமரசத்திற்கு சம்மதிக்காத நேதாஜி

நேதாஜி தனது அரசியல் குரு மரணமடைந்தபோது சிறையில் இருந்தார். 1926 ஆம் ஆண்டு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சிறையிலிருந்த நேதாஜியை வேட்பாளராக அவரது மாணவர் படையைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

நேதாஜி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். கலவரங்கள் வெடித்தன. மாண்டலே சிறையிலிருந்து நேதாஜி ரங்கூனுக்கு கொண்டுசென்றனர். தனிமைச் சிறையில் பல துன்பங்களுக்கு ஆளானார். காச நோயால் பாதிக்கப்பட்டார். அந்த விஷயத்தை அறிந்த அவருடைய தொண்டர்களும் காங்கிரஸ் கட்சியினரும் நேதாஜியை விடுதலை செய்யக் கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவரை கின்ஸின் சிறைக்கு மாற்றினார்கள். ஆனாலும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
நேதாஜி சுவிட்சர்லாந்து செல்ல சம்மதித்தால் அவரை விடுதலை செய்கிறோம் என்று ஆங்கிலேய அரசு நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனைக்கு மறுப்பு தெரிவித்தார் நேதாஜி. உங்களிடம் பேரம் பேசுவதற்கு நான் கடைக்காரன் இல்லை. என் உடல் மீது எனக்கு அக்கறை இல்லை. ஆனால், என் கொள்கையில் உறுதி இருக்கிறது. எனவே உங்கள் நிபந்தனைக்கு ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
ஆண்டவன் என்னை எப்படி சோதிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அப்படியே சோதிக்கட்டும். அதை ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். நமது பாரத சமுதாயம் முன்பு செய்த பாவங்களுக்கு நான் இப்போது பிராயச்சித்தம் செய்வதாக நினைக்கிறேன். இதில் எனக்கு துளிகூட துக்கம் இல்லை. மாறாக மகிழ்ச்சி அடைகிறேன். எந்த லட்சியத்திற்காக நான் அவதிப்படுகிறேனோ அந்த லட்சியம் மட்டும் சாகாது என்பது உறுதி. மக்களும் இலட்சியத்தை அடைந்தே தீருவார்கள் என்றார் நேதாஜி.



(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநிலச் செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X