பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தான் விடுதலை செய்த 20 மீனவர்கள் இன்று வருகை

Added : நவ 14, 2021
Share
Advertisement
கராச்சி : பாக்., சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் இன்று வாகா எல்லை வழியே தாயகம் திரும்ப உள்ளனர்.திசை தெரியாமல் பாக்., கடல் பகுதிக்குள் நுழையும் இந்திய மீனவர்களை, அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதன்படி இந்திய மீனவர்கள், 600 பேர் பாக்., சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் குஜராத்தைச் சேர்ந்த 350 மீனவர்களில்,

கராச்சி : பாக்., சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் இன்று வாகா எல்லை வழியே தாயகம் திரும்ப உள்ளனர்.

திசை தெரியாமல் பாக்., கடல் பகுதிக்குள் நுழையும் இந்திய மீனவர்களை, அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதன்படி இந்திய மீனவர்கள், 600 பேர் பாக்., சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் குஜராத்தைச் சேர்ந்த 350 மீனவர்களில், லந்தி சிறையில் உள்ள 20 பேரின் தண்டனைக் காலம் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் இன்று பஞ்சாப் மாநிலம் வாகா - அடாரி எல்லையில், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக, பாக்., சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X