நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பா.ஜ., இன்று ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பா.ஜ., இன்று ஆலோசனை

Added : நவ 14, 2021
Share
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணியை தொடரலாமா; வேண்டாமா என்பது குறித்து, பா.ஜ., தேசிய பொது செயலரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவியுடன், தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகள், இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, இம்மாதம், 7ம் தேதி

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணியை தொடரலாமா; வேண்டாமா என்பது குறித்து, பா.ஜ., தேசிய பொது செயலரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவியுடன், தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகள், இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, இம்மாதம், 7ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற இருப்பதாக, தமிழக பா.ஜ., அறிவித்தது.இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. கனமழை காரணமாக விருப்பு மனு பெறுவதை, பா.ஜ., தள்ளி வைத்துள்ளது.இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தில், சி.டி.ரவி, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
நகரங்களில், படித்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள், பிரதமர் மோடி ஆட்சியின் பயன்களை அறிந்துள்ளனர். அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு நிச்சயம் ஓட்டளிப்பர். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 25ல் போட்டியிட பா.ஜ., விரும்புகிறது. மற்ற மாநகராட்சி, நகராட்சிகளிலும் குறிப்பிட்ட இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப அந்த இடங்களை அ.தி.மு.க., தலைமை ஒதுக்குமா என்று தெரியவில்லை.

எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணியை தொடரலாமா; வேண்டாமா என்பது குறித்து, சி.டி.ரவி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.அதில், பெரும்பாலான நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துக்கு ஏற்ப, கூட்டணி விவகாரத்தில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X