சுவாமி சிலைகளை பாதுகாக்க கம்பி வேலி அமைக்க ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுவாமி சிலைகளை பாதுகாக்க கம்பி வேலி அமைக்க ஏற்பாடு

Added : நவ 14, 2021
Share
பெரம்பலுார் : சிறுவாச்சூரில், சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டதால், 6.80 லட்சம் ரூபாய் செலவில், கோவிலை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது.பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில், பெரியாண்டவர் கோவில், ஆத்தடி சித்தர் கோவில், பெருமாள் கோவில்களில் உள்ள 41 சுவாமி சிலைகள், அக்டோபர் 6, 27 மற்றும் நவம்பர் 9 ஆகிய தேதிகளில்,

பெரம்பலுார் : சிறுவாச்சூரில், சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டதால், 6.80 லட்சம் ரூபாய் செலவில், கோவிலை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில், பெரியாண்டவர் கோவில், ஆத்தடி சித்தர் கோவில், பெருமாள் கோவில்களில் உள்ள 41 சுவாமி சிலைகள், அக்டோபர் 6, 27 மற்றும் நவம்பர் 9 ஆகிய தேதிகளில், மர்ம நபரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.இது குறித்து, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, கடலுார் மாவட்டம், கால்நாட்டான் புலியூர் கிராமத்தை சேர்ந்த நாதன்,42, என்பவரை கைது செய்தனர்.

தொடர்ந்து, கோவில் சிலைகளின் பாதுகாப்பு கருதி பெரியசாமி, செல்லியம்மன் வகையறா கோவிலை சுற்றி, 3.10 லட்சம் ரூபாய் மதிப்பிலும், செங்கமலையார் மற்றும் ஆத்தடி சித்தர் கோவிலை சுற்றி 3.70 லட்சம் ரூபாய் மதிப்பிலும் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கு, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி கேட்டு, அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X