ஆரோவிலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

Added : நவ 14, 2021
Share
Advertisement
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் உள்ள சர்வதேச நகரைக் காண்பதற்காக வாரம் தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.தீபாவளியைத் தொடர்ந்து வந்த வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தினத்தன்று ஆரோவில் மாத்திரி மந்திரைக் காண 2000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.அதே தினங்களில்
 ஆரோவிலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் உள்ள சர்வதேச நகரைக் காண்பதற்காக வாரம் தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.தீபாவளியைத் தொடர்ந்து வந்த வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தினத்தன்று ஆரோவில் மாத்திரி மந்திரைக் காண 2000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.அதே தினங்களில் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியை ரசிக்க, ஏராளமான வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. தற்போது கனமழை காரணமாக ஆரோவிலிற்கு வரும் சர்வதேச மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை நேற்று வெகுவாக குறைந்தது. தந்திராயன்குப்பத்திற்கும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X