சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: டாக்டர் மீது வழக்கு

Added : நவ 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கரூர்: 11ம் வகுப்பு படிக்கும் தனது மகளை , பிரபல டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெண் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து, கரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், காசாளராக பணியாற்றும் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கரூர் அனைத்து மகளிர் போலீஸ்

கரூர்: 11ம் வகுப்பு படிக்கும் தனது மகளை , பிரபல டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெண் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து, கரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், காசாளராக பணியாற்றும் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகார் மனு: நான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் டாக்டர் ரஜினிகாந்த், அவரது அறையில், நேற்று(நவ.,13) எனது 17 வயது மகளுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.மேலும், மருத்துவமனை மேலாளர் சரவணன் என்பவர் மூலம் சிறுமி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து ரஜினிகாந்த் மற்றும் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, டாக்டர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar R -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-202123:15:33 IST Report Abuse
Sukumar R Childrens Day Special. TN needs million bedded Lunatic hospital centres.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X