பொது செய்தி

இந்தியா

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.தற்போது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக உள்ளது.இந்நிலையில் இந்த இரு அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீடிக்கும் வகையில் மத்திய அரசு இரண்டு அவசர சட்டங்களை கொண்டு
cbi, enforcement directorate, ed,

புதுடில்லி: சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

தற்போது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக உள்ளது.இந்நிலையில் இந்த இரு அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீடிக்கும் வகையில் மத்திய அரசு இரண்டு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி, தற்போது பதவியில் உள்ள இயக்குநர்கள் தங்களது பதவிக்காலம் முடிந்த பிறகும், மேலும் 3 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடியும். இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால், உடனடியாக அமலுக்கு வந்தது.


latest tamil news




தற்போது அமலாக்கத்துறையின் இயக்குநராக இருக்கும் எஸ்கே மிஸ்ராவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளது.

இவர், கடந்த 2018ம் ஆண்டு அமலாக்கத்துறை இயக்குநராக பதவியேற்று கொண்டார். கடந்த ஆண்டு அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. இது வரும் நவ.,17 ம் தேதி நிறைவு பெற உள்ளது. அவரது பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மிகவும் அரிதான மற்றும் அசாதாரண சூழலில் மட்டுமே நீட்டிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-202120:05:28 IST Report Abuse
அப்புசாமி கெழ போல்ட்டுங்க வாழ்வாதாரம் முக்கியம். கீழே திறமையானவங்க யாரும் இல்லே போலிருக்கு. ரெண்டு கோடி வேலை திட்ட்ம் ஜிந்தாபாத்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
14-நவ-202119:49:06 IST Report Abuse
GMM CBI, ED இயக்குனர் பதவிக்காலம் பிஜேபி அரசு மேலும் நீடித்து என்ன பயன்? ( இது தொடர்பாக SCI அசாதாரண சூழ்நிலையில் மட்டும் நடவடிக்கை எடுக்க பணிக்கிறது) கேரளாவில் தங்க கடத்தல், துரை முருகன் இனிசியல், திமுக முக்கிய பிரமுகர் வீடு ரெய்டு, மேற்கு வங்க நடவடிக்கை எதிலும் குற்றம் கண்ட பின் நீதிமன்ற கதவை தட்டுகிறீர்கள். இருக்கும் அதிகாரம் கொண்டு தண்டிக்காவிடில், வக்கீல் வாதம் திசை திருப்பி விடும். கேரள கம்யூனிஸ்ட், தமிழக திமுக, மேற்கு வங்க மம்தா பூரண majority வெற்றிக்கு வழக்கு விசாரணை தொய்வு முக்கிய காரணம். மெய்நிகர் currency நாட்டின் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஜயம். ராணுவம் மீது உத்தரவு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஜயம். வழக்கறிஞர்கள் சர்வ சாதாரணமாக மனு செய்து அரசுக்கு (நாட்டுக்கு) எதிராக உத்தரவு பெற்று வருகின்றனர். மெட்ராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் தொடர்பாக நளினி சிதம்பரம் மறு ஆய்வு செய்ய கூறுகிறார். சட்ட அமைச்சர் பணி அதிகம் உள்ளது.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
14-நவ-202119:21:23 IST Report Abuse
தியாகு இப்பவாவது கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் கனியக்கா 2ஜி கேஸை முடித்து திகாருக்கு அனுப்புவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X