பொது செய்தி

இந்தியா

ராணுவ வீரர்களின் தைரியத்தை கேள்வி கேட்கும் கட்சிகள்: ராஜ்நாத்

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
லக்னோ: சில அரசியல் கட்சிகள், நமது ராணுவ வீரர்களின் தைரியம் குறித்து கேள்வி எழுப்புவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.உ.பி.,யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: நமது அண்டை நாடு ஒன்று தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. அந்நாட்டை பற்றி அனைவருக்கும் தெரியும். அதன் பெயரை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இல்லை. இது போன்ற பிரச்னையை
rajnathsingh, rajnath, ராஜ்நாத், ராஜ்நாத்சிங், பாஜ,

லக்னோ: சில அரசியல் கட்சிகள், நமது ராணுவ வீரர்களின் தைரியம் குறித்து கேள்வி எழுப்புவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: நமது அண்டை நாடு ஒன்று தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. அந்நாட்டை பற்றி அனைவருக்கும் தெரியும். அதன் பெயரை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இல்லை. இது போன்ற பிரச்னையை சந்தித்தாலும், பல நாடுகள் அதனை எதிர்க்கவில்லை. முன்னர், நமது நிலைமையும் அப்படி தான் இருந்தது. ஆனால், 2014ம் ஆண்டிற்கு பிறகு சூழ்நிலை மாறியது.


latest tamil news


இந்த முறை நமது அண்டை நாடுகளுக்கு ஒரு செய்தியை அனுப்புவதில் நமது வீரர்கள் வெற்றி கண்டனர். நமது வீரர்களின் தைரியம் குறித்து சில அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின. நமது தலைமையின் பெயரையும் கையில் எடுத்தனர். ஆனால், அரசியல்வாதிகள் எல்லையில் போரிடுவது கிடையாது. நமது வீரர்கள் அதனை செய்வார்கள்.

நமது வீரர்களின் கைகள் கட்டி வைக்கப்படவில்லை. முடிவை எடுத்து கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் துணை நிற்கிறோம். இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற முறையில் சொல்கிறேன். எதிர்பாராதவிதமாக, அவர்கள் எடுக்கும் முடிவு தவறாக அமைந்தாலும், அப்போதும் வீரர்களுடன் துணை நிற்போம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyanam Siv - Chennai,இந்தியா
15-நவ-202109:02:19 IST Report Abuse
Kalyanam Siv முதலில் அவர்களின் தியாகத்தை நீங்கள் கௌரவித்தீர்களா? அவர்களின் உடல் ஊனமுற்ற ஓய்வு ஊதியத்தில் எத்தனை முரண்பாடுகள். சம்பள கமிஷன் சிபாரிசு செய்தது என்ன? சிப்பாய்களுக்கு 12000 அதிகாரிகளுக்கு 27000 பரிந்துரைத்ததை மாற்றி 9300 சிப்பாய்களுக்கு 67500 அதிகாரிகளுக்கு என்று மாற்றி அமைத்தீர்களே? நீங்கள் அவர்களின் தியாகத்தை மதிப்பவர்களா? நீங்கள் செய்தது அநியாயமில்லையா? அரக்கத்தனமானதில்லையா? அநாகரீகமானதில்லையா? அபத்தமாக தெரிய வில்லையா? முதலில் நீங்கள் நியாயமாக நடக்க தெரிந்து கொள்ளுங்கள். சம்பள கமிஷன் சிபாரிசு செய்தது சரியில்லை என்றால், அதனை விட உயந்ததை தானே செய்திருக்க வேண்டும்? இதுதான் நீங்கள் சிப்பாய்களின் தியாகத்தை மதிக்கும் விதமா? இது தான் நீங்கள் அவர்களின் நலன் காக்கும் தன்மையா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-நவ-202104:43:45 IST Report Abuse
J.V. Iyer இப்படி இந்திய இறையாண்மைக்கு புறம்பாக கேள்விகேபவர்கள் தேச விரோதிகள். இவர்கள் நாடு கடத்தப்படவேண்டும்.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-நவ-202120:15:09 IST Report Abuse
முக்கண் மைந்தன் சைனா அப்டீங்கற பேர சொல்ல இவுனுங்க ஒத்தெனுக்கும் வாயி வராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X