பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்னூக்கர், பில்லியார்ட்ஸ் தேசிய போட்டிக்கு குன்னூர் மாணவர் தேர்வு

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021
Share
Advertisement
குன்னுார் : குன்னுார் பள்ளி மாணவர், தேசிய பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர் போட்டிக்கு தகுதிபெற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ஷாம் ஆல்வின், 13. சென்னையில் கடந்த மாதம் 29ல் நடந்த மாநில போட்டியில், வெற்றிபெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றார்.தற்போது குன்னுார் கிளப்பில்,
ஸ்னூக்கர், பில்லியார்ட்ஸ் தேசிய போட்டிக்கு குன்னூர் மாணவர் தேர்வு

குன்னுார் : குன்னுார் பள்ளி மாணவர், தேசிய பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர் போட்டிக்கு தகுதிபெற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ஷாம் ஆல்வின், 13. சென்னையில் கடந்த மாதம் 29ல் நடந்த மாநில போட்டியில், வெற்றிபெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றார்.

தற்போது குன்னுார் கிளப்பில், இவருக்கு தீவிர பயிற்சி அளித்து வரும், தலைமை பயிற்சியாளர் முரளி கூறுகையில், " ஆங்கிலேயர் ஆட்சியின் போது நீலகிரியில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்திய பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர் தற்போது உலகளவில் பிரசித்திபெற்றுள்ளது. தற்போது மற்ற விளையாட்டுக்களை போல இதற்கும் ஊக்குவித்து பரிசு தொகை வழங்குகிறது.


latest tamil news



திருப்பூரில் நடந்த மாநில பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர் தகுதி போட்டிகளில், சப்- ஜூனியர் பிரிவில், ஷாம் ஆல்வின் முதலிடம் பெற்று, சென்னையில், 40 பேர் பங்கேற்ற மாநில போட்டியில், 4வது இடம் பெற்றார். இதனால், வரும் டிச., 18ல் போபாலில் நடக்கும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்று, தற்போது தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்," என்றார்.

ரஷ்யா, பெல்ஜியத்தில் நடந்த 3 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று உலக தர வரிசை பட்டியலில் இடம் பெற்ற ஷாம் ஆல்வினின் சகோதரி மரியம் ஆக்னஸ் மற்றும் தந்தை குமார் ஆகியோரும் பயிற்சிக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X