உ.பி.,யில் காங்., தனித்து போட்டி: பிரியங்கா உறுதி

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புலந்த்ஷர்: உ.பி.,யில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரசை தயார் படுத்தும் வகையில், பிரியங்கா அம்மாநிலத்திற்கு அடிக்கடி சென்று பல்வேறு
Congress, Priyanka, priyankagandhi, Priyankavadra,Uttar Pradesh,உத்தரபிரதேசம்,காங்கிரஸ், பிரியங்கா, பிரியங்கா காந்தி, பிரியங்கா வாத்ரா,

புலந்த்ஷர்: உ.பி.,யில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.

உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரசை தயார் படுத்தும் வகையில், பிரியங்கா அம்மாநிலத்திற்கு அடிக்கடி சென்று பல்வேறு கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் புலந்த்ஷரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என ஏராளமான கட்சி தொண்டர்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்; எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news





மாயாவதிக்கு ஆறுதல்



உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தாய் ராம்ரதி உடல் நலம் பாதிக்கப்பட்டு டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் காலமானார். இந்நிலையில், மாயாவதியை சந்தித்த, பிரியங்கா அவருக்கு ஆறுதல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abibabegum - madurai- Anna nagar,இந்தியா
15-நவ-202113:12:37 IST Report Abuse
abibabegum உ.பி.,யில் காங்., தனித்து போட்டி: பிரியங்கா உறுதி தனித்து நாசமா போ
Rate this:
Cancel
canchi ravi - Hyderabad,இந்தியா
15-நவ-202112:14:22 IST Report Abuse
canchi ravi பூஜ்யம் வாங்க வழி.
Rate this:
Cancel
15-நவ-202112:12:04 IST Report Abuse
theruvasagan ஏதோ ஒரு சினிமா வசனம் ஞாபகத்துக்கு வந்தது. எங்கப் போனாலும் நான்தான் முக்கியம். கல்யாண வீட்டுக்குப் போனா நான்தான் மாப்பிள்ளையா இருப்பேன். எழவு வீட்டுக்குப் போன நான்தான் பொணமா இருக்கணும். எப்படியோ இருக்கட்டும். முடிவை மாத்திக்காம இருந்தா நாட்டுக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X