சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்கண்டங்களின் வரலாறுபூமி தோன்றிய போது கண்டங்கள் எதுவும் இல்லை. கடல் மட்டுமே இருந்தது. பின் பல்வேறு சமயங்களில் கடலுக்கு மேலே கண்டங்கள் உருவாகின. அதாவது தற்போதில் இருந்து 250 கோடி ஆண்டுகளுக்கு முன் கண்டங்கள் உருவாகியதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். தற்போது இந்தியாவில் (ஒடிசா, ஜார்க்கண்ட்) நடத்திய ஆய்வில் 320 கோடி ஆண்டுகளுக்கு முன்பே (ஏற்கனவே

அறிவியல் ஆயிரம்

கண்டங்களின் வரலாறு


பூமி தோன்றிய போது கண்டங்கள் எதுவும் இல்லை. கடல் மட்டுமே இருந்தது. பின் பல்வேறு சமயங்களில் கடலுக்கு மேலே கண்டங்கள் உருவாகின. அதாவது தற்போதில் இருந்து 250 கோடி ஆண்டுகளுக்கு முன் கண்டங்கள் உருவாகியதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். தற்போது இந்தியாவில் (ஒடிசா, ஜார்க்கண்ட்) நடத்திய ஆய்வில் 320 கோடி ஆண்டுகளுக்கு முன்பே (ஏற்கனவே கணித்ததை விட 70 கோடி ஆண்டுக்கு முன்) கண்டங்கள் தோன்றியிருக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்

அசாமின் முக்கிய ஆறு


மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், அசாம் மாநிலங்களில் பாய்கிறது பராக் ஆறு. இது மணிப்பூரின் லியாய் குலென் கிராமத்தில் மலைப்பகுதியில் உருவாகிறது. அசாமின் முக்கிய ஆறுகளில் ஒன்று. இதன் மொத்த நீளம் 900 கி.மீ. இதில் 524 கி.மீ. இந்தியாவிலும்,
31 கி.மீ., இந்தியா - வங்கதேச எல்லையிலும் மீதி வங்கதேசத்தில் சூர்மா, குஷியரா, மேஹ்னா என்ற பெயர்களில் பாய்ந்து இறுதியாக வங்கக்கடலில் கலக்கிறது. சோனாய், ஜிரி, டியாங், லோங்கல், மதுரா என இதன் அனைத்து கிளை ஆறுகளும் இந்தியாவில் மட்டுமே பாய்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X