டில்லி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தாயார் தனது 92-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து பகுஜன் சமாஜ், காங்கிரஸ், பாஜ., உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
உத்திரப்பிரதேச மாநில கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜ.,வுக்கு பெரும் போட்டியாக விளங்குகின்றன.
பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி டில்லியில் இருந்த சமயத்தில் தனது தாயார் ராம்ரதி (92) மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பலனின்றி காலமானதாகத் தகவல் வெளியானது.

இதனையடுத்து அவர் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு விரைந்தார். ராம்ரதிக்கு இறுதி காரியங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா மாயாவதியின் தாயார் இறப்புக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். கடந்த ஆண்டு 95 வயதான மாயாவதியின் தந்தை காலமானது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE