பொது செய்தி

தமிழ்நாடு

நூலகம் பகுதியில் தூய்மை பணி பூங்கா அமைக்க திட்டம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை டிஜிட்டல் நுாலகப்பகுதியிலிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.உடுமலை குட்டைத்திடல் பகுதியில், 1958ல் துவக்கப்பட்ட முதற்கிளை நுாலகம் உள்ளது. 15 ஆயிரத்து, 400 வாசகர்கள், 1.20 லட்சம் நுால்கள் என மாவட்டத்தில் முதன்மை நுாலகமாக உள்ளது.இங்கு, 50 லட்சம் ரூபாய் செலவில், இணைய தள வசதியுடன் கூடிய, 25 கம்ப்யூட்டர்கள், சிறுவர் நுாலகம் என அனைத்து நவீன

உடுமலை:உடுமலை டிஜிட்டல் நுாலகப்பகுதியிலிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.உடுமலை குட்டைத்திடல் பகுதியில், 1958ல் துவக்கப்பட்ட முதற்கிளை நுாலகம் உள்ளது. 15 ஆயிரத்து, 400 வாசகர்கள், 1.20 லட்சம் நுால்கள் என மாவட்டத்தில் முதன்மை நுாலகமாக உள்ளது.
இங்கு, 50 லட்சம் ரூபாய் செலவில், இணைய தள வசதியுடன் கூடிய, 25 கம்ப்யூட்டர்கள், சிறுவர் நுாலகம் என அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய 'டிஜிட்டல்' நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று (15ம் தேதி), கல்வித்துறை அமைச்சர் மகேஷ் திறந்து வைக்க உள்ளார். நுாலகத்தின் பின் பகுதியில், குட்டைத்திடல் பகுதியில், பழைய வாகனங்கள், குப்பை கொட்டும் மையமாகவும், திறந்த வெளி கழிப்பிடமாகவும் மாறி, சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது. நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் துர்நாற்றத்துடனும், கொசுக்கடி என கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
டிஜிட்டல் நுாலகம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், சுகாதாரக்கேடு அகற்ற வேண்டும், என வலியுறுத்தப்பட்டது. விழா முன் ஏற்பாடுகள் குறித்து, எம்.பி., சண்முகசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில், நுாலகத்திற்கு பின்புறம் உள்ள பகுதியிலுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பு வேலியுடன் கூடிய பூங்கா அமைப்பது, இதற்கான நிலத்தை வருவாய்த்துறை, நுாலகத்துறை வசம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.உடனடியாக, நுாலகப்பகுதியில் நகராட்சி அதிகாரிகள் தலைமையில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X