பயிர்க்காப்பீடு செய்வது அவசியம் :வேளாண்துறை விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்க்காப்பீடு செய்வது அவசியம் :வேளாண்துறை விழிப்புணர்வு

Added : நவ 14, 2021
Share
உடுமலை:உடுமலை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்ய, வேளாண்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.இயற்கை இடர்பாடுகளால் பயிர் சேதம் ஏற்படும் போது, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, உரிய நிதி உதவி வழங்கி, பாதுகாக்கும் வகையிலும், பண்ணை வருவாயை மேம்படுத்தவும், புதிய நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதை

உடுமலை:உடுமலை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்ய, வேளாண்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.இயற்கை இடர்பாடுகளால் பயிர் சேதம் ஏற்படும் போது, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, உரிய நிதி உதவி வழங்கி, பாதுகாக்கும் வகையிலும், பண்ணை வருவாயை மேம்படுத்தவும், புதிய நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில், பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.உடுமலை வட்டாரத்தில், கல்லாபுரம், ராமகுளம், எலையமுத்துார் உள்ளிட்ட குறிச்சிக்கோட்டை மற்றும் பெரியவாளவாடி பிர்காவிற்குட்பட்ட பகுதிகளில், நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நெல் நடவு செய்த விவசாயிகள், பயிர்க்காப்பீடு செய்ய, ஏக்கருக்கு, 532 ரூபாய் மற்றும் அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், இன்றைக்குள் (நவ.,15ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.அதே போல், மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு, 464 ரூபாய் பிரீமியம் செலுத்தி, வரும், 30ம் தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.சோளம் பயிருக்கு, ஏக்கருக்கு, 35 ரூபாய், டிச., 15க்குள் செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும், என வேளாண் துறை உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.பயிர்க்காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து, வலையபாளையம், எலையமுத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X