பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோரிடம் மனம் விட்டு பேச 'அட்வைஸ்'

Added : நவ 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்,' என குழந்தைகள் தினவிழா கருத்தரங்கில் குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் விஐயகுமார் தெரிவித்தார்.பொள்ளாச்சி பி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினவிழாவையொட்டி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி

பொள்ளாச்சி:'குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்,' என குழந்தைகள் தினவிழா கருத்தரங்கில் குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் விஐயகுமார் தெரிவித்தார்.பொள்ளாச்சி பி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினவிழாவையொட்டி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி முதல்வர் குமார் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் சர்மிளா பர்வீன் வரவேற்றார்.தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் விஐயகுமார் பேசியதாவது:ஐக்கிய நாடுகள் சபை, குழந்தைகளுக்கான, 37 வகையான உரிமைகளை பிரகடனம் செய்து அமல்படுத்தி வருகிறது. வாழ்வதற்கான உரிமை, வளர்வதற்கான உரிமை, பாதுகாப்பு, பராமரிப்பிற்கான உரிமை என வகைப்படுத்தி உள்ளது. குழந்தைகள் அவர்களுக்கான உரிமைகளை முழுவதுமாக அறிந்து கொண்டு அறிமுகம் இல்லாதவர்களின் தொடர்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.தாய் தந்தையர்களை விட சிறந்த நண்பர்கள் இருக்க முடியாது. அவர்களிடம் மனம் விட்டுப்பேசுவதோடு அன்றாட நிகழ்வுகளை கலந்துரையாடல் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.பெற்றோர்களும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவேண்டும். பள்ளிக்கு வரும்போதும் பயணநேரங்களின் போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆபத்து என உணரும் பட்சத்தில் அருகில் உள்ளவர்களை சத்தமிட்டு உதவிக்கு அழைக்கவும் தயக்கம் கூடாது.குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து, 0422---2305445 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, 1098 கட்டணமில்லா எண்ணிலும் www.Pencil. gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள், ஸ்டிக்கர் ஆகியவை மாணவ மாணவியருக்கு வினியோகம் செய்யப்பட்டது. பள்ளி துணை முதல்வர் விக்டோரியா சாந்தி நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X