ஒரு போன் போதுமே! காட்சிப்பொருளாக கழிப்பிடங்கள்| Dinamalar

ஒரு போன் போதுமே! காட்சிப்பொருளாக கழிப்பிடங்கள்

Added : நவ 14, 2021
Share
கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் முறையான பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளன. கழிப்பிடங்களை பராமரிக்க வேண்டும்.கே.ஆனந்தன், கிணத்துக்கடவு.போக்குவரத்து பாதிப்புபொள்ளாச்சி தேர்முட்டி பகுதியில், ரோட்டோரங்களில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதித்து தினமும் விபத்துக்கள்

கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் முறையான பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளன. கழிப்பிடங்களை பராமரிக்க வேண்டும்.கே.ஆனந்தன், கிணத்துக்கடவு.
போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி தேர்முட்டி பகுதியில், ரோட்டோரங்களில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதித்து தினமும் விபத்துக்கள் ஏற்படுகிறது.எம்.கனகராஜ், பொள்ளாச்சி.
கால்வாய் சுத்தப்படுத்தணும்
பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி ஊராட்சியில், பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் குப்பை அடைத்துள்ளன. இதனால், கழிவுநீருடன் மழைநீர் தேங்கி ரோட்டில் வழிந்தோடுகிறது.ஆர்.முருகவேல், ஆச்சிபட்டி.
பக்தர்களுக்கு தொல்லை
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியிலுள்ள கடைக்காரர்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களை கையை பிடித்து இழுத்து, பொருட்கள் வாங்க வற்புறுத்துவதால், பக்தர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.எஸ்.வீரமணி, ஆனைமலை.
'பார்க்கிங்' வேண்டும்
வால்பாறைக்கு தினமும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், 'பார்க்கிங்' வசதி இல்லாததால் ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துகின்றனர். வாகனங்கள் நிறுத்த நகராட்சி சார்பில், 'கார் பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும்.சா.கிரண், வால்பாறை.
சிக்னல் அமைக்கப்படுமா?
உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் முக்கோணத்தில், மூன்று ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க சிக்னல் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ப. செல்வம், உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
கொமரலிங்கம், கணியூர் உள்ளிட்ட பல இடங்களில் பன்றிகள் வளர்க்கப்படுகிறது. இதனால், நோய் பரவி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.த.வேலப்பன், கொமரலிங்கம்.போலீசார் கவனத்துக்குதெற்கு கண்ணாடிப்புத்துார் சமுதாயநலக்கூடம் பகுதி, 'குடி' மகன்கள் ஆக்கிரமிப்பால் திறந்தவெளி பாராக மாறி விட்டது. இதனால் மக்கள் அந்த வழியாக செல்ல முடிவதில்லை. இதற்கு போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.வே. ரமேஷ், கண்ணாடிப்புத்துார்.
புதர் அகற்றப்படுமா?
உடுமலை பழநி ரோட்டில், காந்திநகர் நெடுஞ்சாலைத்துறை அலுவலக பகுதியில், புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் விஷஜந்துகள் உலா வருகின்றன. இந்த புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ். கார்த்திகேயன், உடுமலை.
பள்ளம் சீரமைக்கப்படுமா?
உடுமலை ராஜேந்திரா ரோடு மதுக்கடை அருகில் மெகா குழி காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குஉள்ளாகின்றனர். இதை சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம். சங்கர், உடுமலை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X