பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மானியம் பயன்படுத்த வழிகாட்டுதல்! தலைமையாசிரியர்கள் பங்கேற்பு

Added : நவ 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வட்டார அலுவலகத்தில், பள்ளி மானியம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், தலைமையாசிரியர் கூட்டம் நடந்தது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், தெற்கு வட்டார வள மையத்தில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பிரசாத், உதவி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வட்டார அலுவலகத்தில், பள்ளி மானியம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், தலைமையாசிரியர் கூட்டம் நடந்தது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், தெற்கு வட்டார வள மையத்தில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பிரசாத், உதவி வட்டார கல்வி அலுவலர் எடிசன் பெர்னாட் முன்னிலை வகித்தனர்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஆசிரியர் பயிற்றுனர் காயத்ரி துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள் அருண் ராஜேந்திரன், ஆறுமுகம், கலை செல்வி, வளர்மதி, ேஹமலதா மற்றும் கிராம கல்விக்குழு கணக்காளர்கள், ஒருங்கிணைந்த பள்ளி மானியம் குறித்து விளக்கம் அளித்தனர்.தெற்கு வட்டார வள மையத்தில், 76 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 2020 - 2022ம் கல்வியாண்டில் வழங்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மானியம், 50 சதவீதம் தொகை செலவின விபரம் மற்றும், 'சேப்டி மற்றும் செக்யூரிட்டி' மானியம் செலவின விபரம், எஸ்.எம்.சி., தீர்மான பதிவேடு முறையாக பயன்படுத்துவது குறித்து தலைமையாசிரியர்களுக்கு விளக்கப்பட்டது.அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி மேலாண்மை குழு வழியாக செலவிடுவதற்கான நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. செலவினங்களுக்கான தொகை, 'பிஎப்எம்எஸ்' போன்ற வழிகளில் சார்ந்த நபர் அல்லது நிறுவனத்தின் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்க கூடாது.ஒருங்கிணைந்த பள்ளி மானிய பதிவேடு மற்றும் பள்ளி தகவல் பலகையில் ஒருங்கிணைந்த பள்ளி மானிய தொகை பெறப்பட்ட விபரத்தை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும்.தலைமையாசிரியர், மேலாண்மை வளர்ச்சிக் குழுவினர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்தாலோசித்து இக்கல்வியாண்டில் எந்தந்த பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்ற தேவைப்பட்டியல் தயாரித்தல் வேண்டும்.உத்தேச செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு அதனை தீர்மானமாக பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு தீர்மான பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும்.பெருந்தொற்றை சமாளிக்க தேவையான கிருமிநாசினியை நுகர் பொருள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.அடுத்த மாதம், 15ம் தேதிக்குள் கட்டட பழுது பார்க்கும் பணிகள் தரமான பொருட்கள் கொண்டு செய்யப்பட வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X