பஞ்சாப் சட்டசபை தேர்தலில் நடிகர் சோனு சூட் சகோதரி போட்டி

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (2)
Advertisement
சண்டிகர்:பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தன் சகோதரி மால்விகா சூட் போட்டியிடப் போவதாக, பாலிவுட் நடிகர் சோனு சூட் அறிவித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட், 48, ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிப் படங்களில் வில்லனாக நடித்து பிரபலம் அடைந்தார்.கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்த போது, வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, பஸ், ரயில் மற்றும் விமான

சண்டிகர்:பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தன் சகோதரி மால்விகா சூட் போட்டியிடப் போவதாக, பாலிவுட் நடிகர் சோனு சூட் அறிவித்தார்.



latest tamil news




பாலிவுட் நடிகர் சோனு சூட், 48, ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிப் படங்களில் வில்லனாக நடித்து பிரபலம் அடைந்தார்.கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்த போது, வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, பஸ், ரயில் மற்றும் விமான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்து தந்தார். இரண்டாம் அலையின் போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்க உதவினார். இதன் வாயிலாக மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, நடிகர் சோனு சூட் சமீபத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் ஆம் ஆத்மியில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை சோனு சூட் மறுத்தார்.பள்ளி மாணவர்களுக்கான டில்லி அரசு திட்டத்தின் துாதுவராக சோனு சூட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை, நடிகர் சோனு சூட் சமீபத்தில் சந்தித்து பேசினார்.இதையடுத்து சோனு சூட் அரசியலில் ஈடுபட போவதாக கூறப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், ''பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் என் தங்கை மால்விகா சூட் போட்டியிடுவார்,'' என, சோனு சூட் அறிவித்தார்.அவர் எந்த கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார் என்பது குறித்து எதுவும் கூறவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-நவ-202122:53:51 IST Report Abuse
Natarajan Ramanathan பொது மக்களுக்கு நன்மை செய்யும் குடும்பம் என்றால் பிஜேபில் இருப்பதே சரியானது....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
14-நவ-202122:26:22 IST Report Abuse
NicoleThomson அகப்பையில் கேப்பையில் என்று ஒரு வழக்க தொடர் நினைவுக்கு வந்து சொல்லுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X