பொது செய்தி

தமிழ்நாடு

சீசன் டிக்கெட் எடுத்தால் சிக்கனம் அதிகம்! ரயில் பயணியர் சங்கம் விழிப்புணர்வு

Added : நவ 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி - கோவைக்கு தினசரி செல்வோம்; அன்றாடம் டிக்கெட் வாங்கி பயணித்தால், மாதம், 1800 ரூபாய் செலவாகும்; சீசன் டிக்கெட் எடுத்தால், 270 ரூபாய் மட்டுமே செலவாகும்,' என ரயில் பயணியர் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.பொள்ளாச்சி - கோவை இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் கல்வி, அலுவலக பணி மற்றும் வியாபாரம் நிமித்தம் பயணிக்கின்றனர். அவர்களுக்கு வசதியாக அலுவலக

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி - கோவைக்கு தினசரி செல்வோம்; அன்றாடம் டிக்கெட் வாங்கி பயணித்தால், மாதம், 1800 ரூபாய் செலவாகும்; சீசன் டிக்கெட் எடுத்தால், 270 ரூபாய் மட்டுமே செலவாகும்,' என ரயில் பயணியர் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.பொள்ளாச்சி - கோவை இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் கல்வி, அலுவலக பணி மற்றும் வியாபாரம் நிமித்தம் பயணிக்கின்றனர். அவர்களுக்கு வசதியாக அலுவலக நேரத்தில் பொள்ளாச்சி - கோவை பயணியர் ரயில் இயங்கி வந்தது. கெரோனா முதல் அலையின் போது ரத்து செய்யப்பட்ட அந்த ரயில், இரண்டாண்டுகளாக இயங்கவில்லை.இதனால், பொள்ளாச்சியில் இருந்த கோவை செல்வோர், முழுக்க முழுக்க பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கின்றனர். பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள்சங்கம், பொது நல அமைப்புகள், எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தீவிரமாக வலியுறுத்தினர்.அதன் விளைவாக, கோவை - பொள்ளாச்சி - பழநி மற்றும் கோவை - பொள்ளாச்சி வழியே ரயில்கள் அறிவிக்கப்பட்டு, பழநி ரயில் சில நாட்களாக இயங்குகின்றது. கோவை - பொள்ளாச்சி ரயில் நேற்று முதல் இயங்க துவங்கியுள்ளது. முன்பு பயணியர் ரயில்களாக இருந்த இந்த ரயில்கள் தற்போது முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்ற பெயரில் கட்டணம் அதிகரித்து இயக்கப்படுகின்றன.இவற்றில், பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்ல, 30 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரம், இந்த ரயில்களுக்கு 'சீசன் டிக்கெட்' எடுத்தால், ஒரு மாதத்துக்கு, 270 ரூபாய் மட்டுமே கட்டணமாகும்.இந்த கட்டணத்தில், கோவை ஸ்டேஷன் மட்டுமின்றி, வட கோவை ஸ்டேஷன் வரை ரயில்கள் மாறிக்கூட பயணிக்க இயலும். பொள்ளாச்சி - போத்தனுார் இடையே பயணிக்க மாதம், 180 மட்டுமே சீசன் டிக்கெட் கட்டணமாகும்.இப்படி, பொள்ளாச்சி - கோவைக்கு தினசரி டிக்கெட் வாங்கினால் போவதற்கு, 900 ரூபாய்; வருவதற்கு, 900 ரூபாய் என மாதம், 1,800 ரூபாய் செலவாகும்; சீசன் டிக்கெட் வாங்கினால் கோவை சென்று வர மாதம், 270 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும்.சீசன் டிக்கெட் எடுப்பதன் வாயிலாக, ஆறில் ஒரு பங்கு மட்டுமே கட்டணமாக செலவாகிறது என்பது குறித்து, பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.சீசன் டிக்கெட் வாங்க, ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அரசு அங்கீகரித்த அடையாள ஆவணம் ஆகியவற்றுடன், ரயல்வே ஸ்டேஷனில் நேரில் சென்று விண்ணப்பம் நிரப்பி எடுத்துக் கொள்ளலாம் என பயணிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X