பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லில் அதிக மகசூல் பெற வேளாண் துறை அறிவுரை

Added : நவ 14, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுவதால், அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் பிரதான பயிராக உள்ளது. குறுவை, சம்பா என இரண்டு பருவத்தில், இங்கு நெல் நடவு செய்யப்படுகிறது.சம்பா சாகுபடி அக்., நவ.,ரில் நடவு செய்யப்பட்டு, ஜன., இறுதி மற்றும் பிப்., தொடக்கத்தில் அறுவடை நடக்கும்.தற்போது

மடத்துக்குளம்:மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுவதால், அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் பிரதான பயிராக உள்ளது. குறுவை, சம்பா என இரண்டு பருவத்தில், இங்கு நெல் நடவு செய்யப்படுகிறது.சம்பா சாகுபடி அக்., நவ.,ரில் நடவு செய்யப்பட்டு, ஜன., இறுதி மற்றும் பிப்., தொடக்கத்தில் அறுவடை நடக்கும்.தற்போது கொமரலிங்கம், கண்ணாடிப்புத்துார், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் 6,000 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.சம்பா சாகுபடியில், பாரம்பரிய முறைகளான நேரடி விதைப்பு, நாற்றங்கால் முறை நடவு, வரிசை நடவு உள்ளிட்ட முறைகளில் நெல் விதைப்பு நடந்துள்ளது. இந்த பயிர்கள் ஆரோக்கியமாக வளர, உரமிடுதல் மிக முக்கியமானதாகும்.இது குறித்து, வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் உரங்கள் இடுவதால், தேவையற்ற இடுபொருள் செலவுகள் தவிர்க்கலாம். ரசாயன கரிம எருக்கள், பசுந்தாள் உரம் பயிர்களின் கழிவுகள் போன்றவற்றால் மண் வளம் அதிகரிக்கும்.அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா இடுவதால் மண்வளம் பாதுகாக்கப்படும். முதன்மை தாவர ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகளுடன் மண் பரிசோதனை அடிப்படையில், நுண்ணுாட்டச்சத்துக்களையும் சேர்க்கும். மகசூல் பெருகும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X