பொது செய்தி

தமிழ்நாடு

வாழைத்தார் விற்பனை மந்தம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வாழைத்தார் ஏலம் நடைபெறுகிறது. திருச்சி போன்ற பிற மாவட்டங்கள்; ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை, சிங்காநல்லுார், தொப்பம்பட்டி போன்ற பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. ஏலத்தில், வியாபாரிகள் வாங்கி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வாழைத்தார் ஏலம் நடைபெறுகிறது. திருச்சி போன்ற பிற மாவட்டங்கள்; ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை, சிங்காநல்லுார், தொப்பம்பட்டி போன்ற பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. ஏலத்தில், வியாபாரிகள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், மழை காரணமாக நேற்று நடந்த ஏலத்தில் வாழைத்தார் விற்பனை மந்தமாக நடந்தது.வியாபாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சியில் நேற்று நடந்த ஏலத்தில் விற்பனைக்கு, 1,500 வாழைத்தார்கள் வந்தன. ஒரு கிலோ பூவம் பழம், 20 ரூபாய், கற்பூர வள்ளி, 20 ரூபாய், செவ்வாழை, 30, நேந்திரம், 28, கதளி, 28 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. விலையில் மாற்றம் இல்லை. மழை காரணமாக வாழைத்தார் விற்பனை மந்தமாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X