தேங்காய் விற்பனைக்கு போகவில்லை: லட்சக்கணக்கில் தேங்கியதால் கவலை

Added : நவ 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:தமிழகத்தில் பெய்யும் தீவிர மழையால், பொள்ளாச்சி பகுதியில் விளைந்த லட்சக்கணக்கான தேங்காய்கள், விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் முடங்கி, விவசாயிகள், வியாபாரிகள் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், தென்னை சாகுபடி பரப்பில் இரண்டாவது இடமும்,

பொள்ளாச்சி:தமிழகத்தில் பெய்யும் தீவிர மழையால், பொள்ளாச்சி பகுதியில் விளைந்த லட்சக்கணக்கான தேங்காய்கள், விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் முடங்கி, விவசாயிகள், வியாபாரிகள் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், தென்னை சாகுபடி பரப்பில் இரண்டாவது இடமும், உற்பத்தி அளவில் முதலிடமும் பொள்ளாச்சி பெற்றுள்ளது.இப்பகுதியிலிருந்து, தேங்காய், தேங்காய் எண்ணெய், இன்ன பிற தேங்காய் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் நாடு முழுக்கவும், உலகம் முழுக்கவும் கொண்டு சென்று விற்கப்படுகிறது. இந்த உலகளாவிய வர்த்தகம், பொள்ளாச்சி பகுதியின் முக்கிய பொருளாதார பின்னணியாக உள்ளது.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகம் முழுக்க பெய்கிறது. பொள்ளாச்சி பகுதியில் மிதமான மழை காணப்பட்டாலும், தேங்காய்க்கு முக்கிய சந்தையாக உள்ள சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள், மழையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.இதனால், பொள்ளாச்சி தேங்காய் வியாபாரிகள் இருப்பு வைக்கப்பட்ட தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமலும், ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்ட இயலாமலும் தவிக்கின்றனர்.தேங்காய்க்கு தேவையும், விலையும் இருந்தும் கூட, பல லட்சம் தேங்காய்கள் பொள்ளாச்சி பகுதியிலேயே தேங்கிக் கிடக்கின்றன. அறுவடை, விற்பனை சரிவர நடக்காமலும், விற்பனை செய்த தேங்காய்க்கு பண பட்டுவாடா சரியாக கிடைக்காமலும், தென்னை விவசாயிகள் பெரும் சிக்கலில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X