பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் நடவு

Added : நவ 14, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நேற்று, அனைத்து கூட்டுறவு சங்க அலுவலகங்களிலும் கொடியேற்று விழா நடந்தது.வடசித்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடந்த கொடியேற்று விழாவுக்கு, பள்ளி வளர்ச்சிக்குழு துணைத்தலைவர் குமாரசாமி, ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நேற்று, அனைத்து கூட்டுறவு சங்க அலுவலகங்களிலும் கொடியேற்று விழா நடந்தது.வடசித்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடந்த கொடியேற்று விழாவுக்கு, பள்ளி வளர்ச்சிக்குழு துணைத்தலைவர் குமாரசாமி, ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர் அழகுநாச்சிமுத்து, குரும்பபாளையம் கிளை செயலாளர் தம்பிராசு முன்னிலை வகித்தனர். கூட்டுறவு கடன் சங்க தலைவர் காளிமுத்து கொடியேற்றினார். கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஆறுமுகம், பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.இதேபோல, கிணத்துக்கடவு, எம்மேகவுண்டன்பாளையம், அரசம்பாளையம், சொக்கனுார், காட்டம்பட்டி, ஜக்கார்பாளையம், கப்பளாங்கரை, சூலக்கல் உள்ளிட்ட, 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் கொடியேற்றி வைத்தனர். கிணத்துக்கடவில் நடந்த நிகழ்ச்சியில், 10 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X