பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்காலத்தில் பரவும் நோய்களை தடுக்க... சிறப்பு குழுக்கள்! நகர, கிராமப்புறங்களில் தீவிர கண்காணிப்பு

Added : நவ 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரம், ஒன்றியப்பகுதிகளில், மழைக்கால நோய்களை தடுக்க, சிறப்பு குழுக்கள் அமைத்து, தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில், சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குளம், குட்டைகள் நிரம்பி வரும் சூழலில், ரோடுகளில், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், மக்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரம், ஒன்றியப்பகுதிகளில், மழைக்கால நோய்களை தடுக்க, சிறப்பு குழுக்கள் அமைத்து, தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில், சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குளம், குட்டைகள் நிரம்பி வரும் சூழலில், ரோடுகளில், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், மக்கள் காய்ச்சல், சளி, வயிற்று போக்கு போன்ற பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்று மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.36 வார்டு; 27 குழுக்கள்நகரில், சுகாதாரக்குழு வாயிலாக, 86 பேர் சிறப்பு டெங்கு தடுப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம், 27 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஆறு நாட்களில், 36 வார்டுகளிலும் இக்குழு மூலமாக சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் தினமும் நேரிடையாக சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி கூறியதாவது:மழைக்கால நோய்கள் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதில், டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு கொசுபுழுவாக மாறி பின்னர் வளர்ச்சியடைந்த கொசுவாக உற்பத்தியாகிறது.எனவே, வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள டிரம்கள், தொட்டிகள், மண்பானை மற்றும் நீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களை கொசு, காற்று புகா வண்ணம் இடைவெளியின்றி மூடி வைக்க வேண்டும்.
வீடுகளில், பயன்படுத்தப்படாத டயர், அம்மி, உரல் போன்றவற்றில், தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துவது அவசியமாகும். திறந்த வெளியில் இருக்கும் தொட்டியில் உள்ள தண்ணீரை கீழே கொட்டி விட்டு, துாய்மைப்படுத்த வேண்டும்.மேலும், கொசுமருந்து அடித்தல், வீடுகளுக்கு நேரிடையாக சென்று, கொசுப்புழு உருவாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே அறிவுரை வழங்கப்படுகிறது.ஆற்றில் மழைநீர் கலந்து வருவதால், குடிநீரில் சூப்பர் குளோரினேசன் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
சாதாரண காய்ச்சல் இருந்தாலும் பொதுமக்கள் உடனடியாக டாக்டர்களை அணுக வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.கண்காணிப்புபொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியப்பகுதிகளிலும் மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பேரூராட்சி பகுதிகளிலும் இது போல தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 20 மஸ்துார்கள் நியமிக்கப்பட்டு ஐந்து குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக சென்று கண்காணிப்பு செய்கின்றனர். கொசு பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட, 19 ஊராட்சிகள், கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், ஆனைமலை பேரூராட்சிகளில் மொத்தம், 40 பேர் நியமிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று கண்காணிப்பு மேற்கொள்கின்றனர்.
மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள், பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள துாய்மை பணியாளர்களுடன் இணைந்து மேற்கொள்கின்றனர். மழைக்கால தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X