பொது செய்தி

தமிழ்நாடு

புலிகள் காப்பகத்தில் திருவிழா: 'மினி டூரில்' பயணிகள் உற்சாகம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், சூழல் சுற்றுலாவை மேம்படுத்த, 'மினி டூர்' திட்டம் துவங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பல இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் சூழல் சுற்றுலா திட்டத்தில், அனைத்து வனச்சரகங்களிலும்

ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், சூழல் சுற்றுலாவை மேம்படுத்த, 'மினி டூர்' திட்டம் துவங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பல இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் சூழல் சுற்றுலா திட்டத்தில், அனைத்து வனச்சரகங்களிலும் தங்கும் விடுதிகள், டாப்சிலிப் யானை சவாரி, மூலிகை பூங்கா, ஆழியாறு வண்ணத்துப்பூச்சி பூங்கா, அட்டகட்டி 'ஆர்கிட்டோரியம்' உள்பட பலவற்றை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.இந்நிலையில், புலிகள் காப்பகத்தில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த, மாதம் ஒரு முறை 'மினி டூர்' நடத்தி, சுற்றுலா பயணிகளை வனச்சரக பகுதிகளிலுள்ள பல இடங்களுக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டனர்.'ஹார்ன்பில்', வரையாடுகள், புள்ளி மான், யானை, சிறுத்தை என ஒவ்வொரு வனவிலங்குகள் பெயரில் திருவிழா போன்று, சூழல் சுற்றுலா நடத்த திட்டமிட்டனர். முதல் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று, 'ஹார்ன்பில்' என்ற தலைப்பில் 'மினி டூர்' நடத்தினர். ஒரு குழுவுக்கு, 20 பேர் என இரண்டு நாட்களில், 40 பேரை அழைத்துச்சென்றனர்.கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் ஆகாஷ்தீப் பருவா மற்றும் புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியன் தலைமை வகித்தனர். துணை இயக்குனர் கணேசன் மற்றும் உதவி வனபாதுகாவலர் செல்வன் முன்னிலை வகித்தனர்.ஆழியாறு வண்ணத்துப்பூச்சி பூங்காவில் துவங்கி, கவியருவி, ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு காட்சிமுனை, வரையாடுகளின் வாழிடங்கள் காண்பிக்கப்பட்டன. பின், அட்டகட்டி பயிற்சி மையத்தில் 'ஹார்ன்பில்' ஆவணப்படம் காண்பிக்கப்பட்டு, அவற்றின் அடர்த்தி, வாழ்வியல் முறை என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.பின், அட்டகட்டி ஆர்கிட்டோரியத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இத்திட்டம் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், திட்டத்தை மேம்படுத்தி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், சூழல் சார்ந்த கல்வியுடன் இயற்கையான பகுதிகளில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X