பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் சேர இளைஞர்கள் ஆர்வம்: ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி, வால்பாறை உட்பட தொகுதிகளில், நடந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள பலர் ஆர்வமாக விண்ணப்பித்தனர்.உடுமலை தொகுதியில், கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்ட, வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில், ஒரு லட்சத்து, 30 ஆயிரத்து, 167 ஆண்கள், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 458 பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவர் என,

உடுமலை;உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி, வால்பாறை உட்பட தொகுதிகளில், நடந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள பலர் ஆர்வமாக விண்ணப்பித்தனர்.
உடுமலை தொகுதியில், கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்ட, வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில், ஒரு லட்சத்து, 30 ஆயிரத்து, 167 ஆண்கள், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 458 பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவர் என, இரண்டு லட்சத்து, 69 ஆயிரத்து, 648 பேர் உள்ளனர்.மடத்துக்குளம் தொகுதியில், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 843 ஆண்கள், ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 842 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவர் என, இரண்டு லட்சத்து, 48 ஆயிரத்து, 705 பேர் இடம் பெற்றிருந்தனர்.வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி மையங்கள், அரசு அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும், 30ம் தேதி வரை, சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.அதன் அடிப்படையில், 2022 ஜன., 1ம் தேதி, 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக சேரலாம் எனவும், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், www.nvsp.in என்ற இணைய தள முகவரியிலும்,மொபைல் ஆப் மூலமும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ள விண்ணப்பிக்கும் வகையில், நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று, சிறப்பு முகாம் நடந்தது.உடுமலை தொகுதியிலுள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்றுமுன்தினம் நடந்த முகாம்களில், புதிய வாக்காளர்களாக இணைய, (படிவம் 6) வழியாக, 771 பேர் விண்ணப்பித்திருந்தனர்.பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய (படிவம் 7) 179 பேரும், பெயர், போட்டோ உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய, ( படிவம் 8) 126 பேரும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் மேற்கொள்ள,(8ஏ) 36 பேரும் என, 1,112 பேர் விண்ணப்பித்தனர்.
மடத்துக்குளம் தொகுதியில், புதிய வாக்காளர்களாக இணைய, 509 பேரும், நீக்கல், 77 பேர், திருத்தம் மேற்கொள்ள, 61 பேரும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றத்திற்கு, 36 பேரும் என, 683 பேர் விண்ணப்பித்திருந்தனர்.நேற்றும், இரு தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இணைய தளம் வழியாகவும், வரும், 27 மற்றும் 28ம் தேதி ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம், என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 269 ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் நடந்த முகாமில், படிவம்,6, -740, படிவம், 7- 205, படிவம்,8, - 121, படிவம், 8ஏ - 116 என மொத்தம், 1,182 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து நேற்று முகாமிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட, 68 வாக்குச்சாவடிகளில், தொடர்ந்து இரண்டு நாட்கள் முகாம் நடந்தது. எஸ்டேட் பகுதியில் புதிய வாக்காளர்கள் அதிக அளவில் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால், தி.மு.க., அ.தி.மு.க.,வினர் புதிய வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களை முகாமில் பங்குபெற செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X