பொது செய்தி

தமிழ்நாடு

புது அறிவிப்பை மறுவரையறை செய்ய நார் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

Added : நவ 14, 2021
Share
Advertisement
ஆனைமலை:தென்னை நார் மற்றும் 'காயர் பித்' உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை மறுவரையறை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென்னை நார் சார்ந்த தொழில்களை, 'வெள்ளை' என்ற வரிசையில் இருந்து மாற்றி, அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை வகைப்படுத்தும் 'ஆரஞ்சு' வரிசையில்

ஆனைமலை:தென்னை நார் மற்றும் 'காயர் பித்' உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை மறுவரையறை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென்னை நார் சார்ந்த தொழில்களை, 'வெள்ளை' என்ற வரிசையில் இருந்து மாற்றி, அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை வகைப்படுத்தும் 'ஆரஞ்சு' வரிசையில் வகைப்படுத்தியுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தென்னை நார் மற்றும் 'காயர் பித்' உற்பத்தியாளர் சங்கத்தினர், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு, கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.மனுவில் கூறியுள்ளதாவது:மத்திய கயிறு வாரியத்தின் ஆலோசனையை பெறாமல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தென்னை நார் சார்ந்த தொழில்களை, 'ஆரஞ்சு' வகைக்கு மாற்றியது கண்டனத்துக்கு உரியது. இதனால், விவசாயிகள், தென்னை நார் சார்ந்த தொழில்கள் கடும் பாதிப்பை சந்தித்து, பொருளாதார நெருக்கடி ஏற்படும்.தென்னை மரத்திலிருந்து இயற்கையாக கிடைக்கும் மட்டையை உரித்து, தென்னை நார், 'காயர் பித்' தனியாக பிரிக்கும் போதும், நார் பண்டலாக மாற்றும் போதும், 'பித்' கட்டியாக மாற்றும்போதும், எவ்வித ரசாயனமும் பயன்படுத்தப்படுவது இல்லை.மத்திய கயிறு வாரியம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், 2016ல் விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படி, நீர் மற்றும் காற்று மாசு ஏற்படாமல் தொழில் செய்து வருகிறோம். தடையை மீறி ரசாயனம் பயன்படுத்திய, மூன்றே தொழிற்சாலைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில், அறிவிப்பு வெளியிட்டது வருத்தத்துக்குரியது. 99.9 சதவீதம் தொழிற்சாலைகளில் ரசாயனம் பயன்படுத்தாமல் தென்னை நார் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்கிறோம். மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை மறுவரையறை செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X