பொது செய்தி

தமிழ்நாடு

அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

Added : நவ 14, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கோதவாடி அங்காளம்மன் கோவில் மகா கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது.கிணத்துக்கடவு, கோதவாடியில் மிகப்பழமையான அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில், கோவில் திருப்பணிகள் துவங்கி நிறைவு பெற்றது. இன்று மகா கும்பாபிேஷக விழா நடக்கிறது. நேற்று மாலை, 4:00 மணி அளவில் மங்கள இசையுடன் விக்னேஷ்வரா பூஜை, முதல்கால யாக பூஜை துவங்கியது. இரவு, 7:00 மணிக்கு அஷ்டபந்தன

கிணத்துக்கடவு:கோதவாடி அங்காளம்மன் கோவில் மகா கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது.கிணத்துக்கடவு, கோதவாடியில் மிகப்பழமையான அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில், கோவில் திருப்பணிகள் துவங்கி நிறைவு பெற்றது. இன்று மகா கும்பாபிேஷக விழா நடக்கிறது. நேற்று மாலை, 4:00 மணி அளவில் மங்கள இசையுடன் விக்னேஷ்வரா பூஜை, முதல்கால யாக பூஜை துவங்கியது. இரவு, 7:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்வு நடந்தது.இன்று காலை,7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்குகிறது. காலை, 9:00 - 10:00 மணிக்குள் ஸ்ரீஅங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, பெரியகளந்தை ஆதீஸ்வரன் கோவில் குருக்கள் சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் மகாகும்பாபிேஷகம் நடக்கிறது.பகல்,12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மகாஅபிேஷகமும் நடக்கிறது. மாலை,6:00 மணிக்கு அந்திகால பூஜையும், தொடர்ந்து, நந்தா தீபம் ஏற்றி வைத்தல் நிகழ்வும் நடக்கிறது. முன்னதாக, காலை, 10:00 மணி முதல் அன்னதானம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X