அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

Updated : நவ 16, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், 30ம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், அக்டோபர் 28ம் தேதி முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தேவையான கட்டுப் பாடுகளை வரும் 3௦ம் தேதி வரை தொடர, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு
 கொரோனா கட்டுப்பாடுகள்  நீட்டிப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், 30ம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், அக்டோபர் 28ம் தேதி முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தேவையான கட்டுப் பாடுகளை வரும் 3௦ம் தேதி வரை தொடர, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதை கருதியும், மக்கள் நலன் கருதியும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றன.

நோய் தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் போன்றவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது தவணையை உரிய காலத்தில் செலுத்திக் கொள்ள வேண்டும்.

நோய் கட்டுப்பாடு பகுதிகளில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப் படும்.இப்பகுதிகளில் அவசர மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர, மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதிஇல்லை. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, நோய் தொற்று பரவலை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும். பொது மக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மழைக் காலத்தில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள், தங்களின் பாதுகாப்பு கருதி, நிவாரண மையங்களில் தங்க வேண்டும். நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு செல்வதையும், ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதையும் முழுதும் தவிர்க்க வேண்டும். தண்ணீர் தொடர்பான தொற்று நோய்கள் எளிதில் பரவும் என்பதால், காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
15-நவ-202123:02:15 IST Report Abuse
RajanRajan இந்துகளின் எதிரிகள் அந்த கடவுளால் விரைவில் துவம்சம் செய்யபடுவர்.
Rate this:
Cancel
p.seetharaman - tirupur,இந்தியா
15-நவ-202115:59:29 IST Report Abuse
p.seetharaman மந்திரிகள் தங்கள் பாதை சரியாக வைத்தால் மக்கள் நன்றாக இருப்பார்கள் சரியாக செய்யவும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டால் சரில்லை
Rate this:
Cancel
Albert -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-202107:42:40 IST Report Abuse
Albert Ok. Close TASMAC as a part of restriction
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X