உடுமலை:உடுமலையில், பள்ளி வளாகத்தில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக தகவல் வெளியானதால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது.உடுமலை அடுத்த சி.இந்திராநகரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 25 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம், பள்ளி வளாகத்தில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அப்பகுதி மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டு, சிலர் பள்ளிக்கு விரைந்தனர். அதேநேரம், மரம் வெட்டுவதற்கு, வருவாய்த்துறையினரிடம் உரிய அனுமதி பெறவில்லை எனவும் புகார் எழுந்தது. இதையடுத்து, பள்ளி வளாகத்திற்குள், ஆபத்தான நிலையில் இருந்த மரக்கிளைகள் மட்டுமே வெட்டி அகற்றப்பட்டிருப்பதை அறிந்த மக்கள், அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளி வளாக மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் தருவிக்கப்பட்டு, மைதானம் சீரமைக்கப்பட்டது.அதேபோல், வளாகத்தில் அதிகப்படியான மரங்கள் உள்ள நிலையில், ஆபத்தான மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.மரங்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE