பொது செய்தி

இந்தியா

ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்புவதில் தொடர் மெத்தனம் ரிசர்வ் வங்கி விதி அமலாகியும் பிரச்னை தீரவில்லை

Updated : நவ 16, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஏ.டி.எம்., இயந்திரங்களில், 10 மணி நேரத்துக்கு மேல் பணம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தால், ஒவ்வொரு இயந்திரத்திற்கும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற, ரிசர்வ் வங்கியின் விதிமுறை, அக்., 1ல் அமலுக்கு வந்து உள்ளது. இருப்பினும், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் பணி வேகம் பிடிக்கவில்லை. மறைமுக மிரட்டல்நாடு முழுதும் 2.13 லட்சம் ஏ.டி.எம்.,கள் உள்ளன. அதாவது,
 ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்புவதில் தொடர் மெத்தனம்  ரிசர்வ் வங்கி விதி அமலாகியும் பிரச்னை தீரவில்லை

ஏ.டி.எம்., இயந்திரங்களில், 10 மணி நேரத்துக்கு மேல் பணம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தால், ஒவ்வொரு இயந்திரத்திற்கும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற, ரிசர்வ் வங்கியின் விதிமுறை, அக்., 1ல் அமலுக்கு வந்து உள்ளது. இருப்பினும், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் பணி வேகம் பிடிக்கவில்லை.


மறைமுக மிரட்டல்



நாடு முழுதும் 2.13 லட்சம் ஏ.டி.எம்.,கள் உள்ளன. அதாவது, வங்கிகளின் கிளைகளுக்கு அருகே, 1.15 லட்சம்; தொலைதுாரத்தில், 97 ஆயிரத்து, 383 ஏ.டி.எம்.,கள் உள்ளன.சிறுநகரங்கள் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள, 70 முதல் 80 சதவீத ஏ.டி.எம்.,களிலும்; நகரங்களில் உள்ளவற்றில், 20 முதல் 30 சதவீத ஏ.டி.எம்.,களிலும் பணம் முறையாக நிரப்பப்படுவதில்லை. அதனால், இவையெல்லாம் அபராதத்துக்கு உள்ளாக வேண்டும். அப்படி அபராதம் விதிக்கப்பட்டால், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் நிறுவனங்கள், மாதம்தோறும், 80 முதல் 100 கோடி ரூபாய் வரை அபராதமாக செலுத்த நேரிடும் என, ஏ.டி.எம்., தொழில் கூட்டமைப்பான, 'காட்மி' தெரிவித்துள்ளது.

ஒரு காலத்தில் எண்ணற்ற நிறுவனங்கள், வங்கிகள் சார்பில் ஏ.டி.எம்., களில் பணத்தை நிரப்புவதை ஒரு தொழிலாக மேற்கொண்டன. அப்போது, கடுமையான விதிமுறைகள் இல்லை; தற்போது, அந்த நிலைமை மாறியுள்ளது. உடனடியாக, தங்கள் சேவைகளை மேலும் விரிவு படுத்துவதை விட்டு விட்டு, ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் நிறுவனங்களின் கூட்டமைப்பான காட்மி, ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளது.'இத்தகைய அபராதத் தொகை என்பதை எங்களால் தாங்க முடியாது. கொரோனாவால் எங்கள் தொழில் நசிந்து போயுள்ளது' என, இந்தக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
மேலும் ஒருபடி போய், 'இத்தகைய அபராதம் தொடருமானால், வேறு வழியின்றி, நாங்கள் ஏ.டி.எம்.,களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியிருக்கும்' என்றும் மறைமுகமாக மிரட்டிஉள்ளது.


கணிசமாக குறையும்

அதுவும் சிறுநகரங்கள், கிராமங்களில் ஏ.டி.எம்.,களை குறைக்கும் நிலை ஏற்படலாம் என்பதால், ரிசர்வ் வங்கியும், ஏ.டி.எம்., தொழில் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பது போல தெரிகிறது.உண்மையில் பிரச்னையின் வேர், வேறு இடத்தில் இருப்பதாக தெரிவிகின்றனர் வங்கித் துறை வல்லுனர்கள்.ஒரே இடத்தில் நான்கைந்து வங்கிகள் அடுத்தடுத்து, ஏ.டி.எம்.,களை நிறுவியுள்ளன.

இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, எந்த வங்கியின் ஏ.டி.எம்.,மில் இருந்தும் பணம் எடுக்கலாம்; எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றெல்லாம் விதிகள் தளர்த்தப் பட்டால், ஏ.டி.எம்.,களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். அவற்றில் பணம் நிரப்புவதும் சுலபமாக இருக்கும். இதை வங்கித்துறை கவனிக்க வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவித்துஉள்ளனர்.
-- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-202113:05:02 IST Report Abuse
அப்புசாமி போறும்...போறும். ரிசர்வ் வங்கி 10000 ரூவா அபராதம் போட்டா , வங்கிகள் 20000 மா நம்ம கிட்டேயிருந்து உருவிடும். ரிசர்வ் வங்கி கண்டுக்காது. அவிங்கள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. அரசாங்கமோ அவிங்களுக்குத்தான் செயல்படுது.
Rate this:
Cancel
canchi ravi - Hyderabad,இந்தியா
15-நவ-202112:33:06 IST Report Abuse
canchi ravi இரண்டு யூனியன் வங்கி மற்றும் இரண்டு ஸ்டேட் பாங்கு வங்கி ஏ டி எம் சென்று வெறும் கையோடு திரும்பினேன் இப்பொழுது
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-நவ-202106:50:31 IST Report Abuse
Kasimani Baskaran வங்கிகள் இன்னும் பிரிட்டிஷ் காலத்தையே நினைவில் வைத்து இயங்குபவை. வெளிநாட்டு வங்கிகளை உள்ளே விட்டால் இவர்கள் திருந்த வாய்ப்பு இருக்கிறது. தவிரவும் கணணி யுகத்தில் இத்தனை கூட்டத்துக்கு சம்பளம் கொடுத்து லாபம் பார்ப்பது சிரமம். அது போக கடன் வாங்கி கம்பி நீட்டும் ஏற்பாட்டில் நொடித்துப்போகாமல் இருக்கவும் வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X