பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூரில் மழை பாதிப்பு

Added : நவ 14, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில், அமைக்கப்பட்டுள்ள 36 முகாம்களில், 1,833 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுதும், பலத்த மழை காரணமாக, வீடு இடிந்து விழுந்ததில், இருவர் இறந்து உள்ளனர்.மேலும், 73 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன. இதுவரை, 54 குடிசை வீடுகள் முழுதும், 816 குடிசைகள் பாதியளவும் சேதமடைந்து உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில்,

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில், அமைக்கப்பட்டுள்ள 36 முகாம்களில், 1,833 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுதும், பலத்த மழை காரணமாக, வீடு இடிந்து விழுந்ததில், இருவர் இறந்து உள்ளனர்.மேலும், 73 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன. இதுவரை, 54 குடிசை வீடுகள் முழுதும், 816 குடிசைகள் பாதியளவும் சேதமடைந்து உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில், 1,155 ஏரிகள் உள்ளன. இவற்றில், நேற்று மாலை வரை, 672 ஏரிகள், நுாறு சதவீதம் நிரம்பி உள்ளன. 75 - 100 சதவீதம் வரை - 308; 50 - 75 சதவீதம் வரை - 141; 25 - 50 சதவீதம் வரை - 5 மற்றும், 25 சதவீதத்திற்குள் - 29 ஏரிகள் நிரம்பி உள்ளன.மீட்பு பணிக்காக, 42 குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 430 ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் 123 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X