பயிர் காப்பீடு இன்று கடைசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு இன்று கடைசி

Added : நவ 14, 2021
Share
திருவள்ளூர் ; சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய, இன்று கடைசி நாளாகும்.திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், 72 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இதுவரை, 25 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். தற்போது, வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், பயிர் சேதம் மற்றும் மகசூல்

திருவள்ளூர் ; சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய, இன்று கடைசி நாளாகும்.திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், 72 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இதுவரை, 25 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். தற்போது, வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், பயிர் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.மேலும், பயிர் காப்பீடு செய்வதற்கு, இன்று கடைசி நாள் என்பதால், விவசாயிகள் அனைவரும் உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X