பொது செய்தி

தமிழ்நாடு

'பான் இந்தியா' திட்ட விழிப்புணர்வு பேரணி

Added : நவ 14, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டில், சட்ட பணிகள் ஆணைக் குழு, 'பான் இந்தியா' திட்ட விழிப்புணர்வு பேரணி, நேற்று, நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்டம் முழுதும், இலவச சட்ட உதவிகள் குறித்து, பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வு முகாம்களை, முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபகா சுந்தரவதனா துவக்கி வைத்தார்.அதைத்
 'பான் இந்தியா' திட்ட விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு : செங்கல்பட்டில், சட்ட பணிகள் ஆணைக் குழு, 'பான் இந்தியா' திட்ட விழிப்புணர்வு பேரணி, நேற்று, நடந்தது.

செங்கல்பட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்டம் முழுதும், இலவச சட்ட உதவிகள் குறித்து, பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வு முகாம்களை, முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபகா சுந்தரவதனா துவக்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில், பான் இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணியை, சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் மீனாட்சி, நேற்று, துவக்கி வைத்தார்.

இங்கு துவங்கிய பேரணி, ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, புதிய பஸ் நிலையம் அருகில் நிறைவடைந்தது.விழிப்புணர்வு பேரணியில், சட்ட சேவைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட வாசகங்களை கையில்ஏந்தி சென்றனர்.இலவச சட்ட உதவிகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செங்கல்பட்டு நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X