அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., அரசு தவறி விட்டது: பா.ஜ., தலைவர்கள் குற்றச்சாட்டு

Updated : நவ 16, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை:மழை நீர் வடிகால் கட்டமைப்புகளை சரி செய்ய, தி.மு.க., அரசு தவறி விட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி ஆகியோர் குற்றம் சாட்டினர்.சென்னை கமலாலயத்தில், மண்டல அளவிலான தேர்தல் பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம், நடந்தது. அனுபவம்பா.ஜ., தேசிய பொது செயலரும், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி தலைமை வகித்தார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இணை
 தி.மு.க., அரசு தவறி விட்டது: பா.ஜ., தலைவர்கள் குற்றச்சாட்டு

சென்னை:மழை நீர் வடிகால் கட்டமைப்புகளை சரி செய்ய, தி.மு.க., அரசு தவறி விட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி ஆகியோர் குற்றம் சாட்டினர்.

சென்னை கமலாலயத்தில், மண்டல அளவிலான தேர்தல் பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம், நடந்தது. அனுபவம்பா.ஜ., தேசிய பொது செயலரும், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி தலைமை வகித்தார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது, மழை, வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண உதவிகளை தொடர்ந்து மேற்கொள்வது, தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் தமிழகம் வருகை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின், சி.டி.ரவி, அண்ணாமலை ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:கடந்த 2016 - 17ம் ஆண்டில் இருந்து வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக, மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். அடுத்த முறை மழை பாதிப்புகள் நிகழக்கூடாது என்பதற்காக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., திருப்புகழ் தலைமையில், தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது வரவேற்கத்தக்கது. திருப்புகழ் இதற்கு முன் பணியாற்றிய இடத்தில், பேரிடரை சமாளித்த அனுபவம் உள்ளனர். அவரை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

வரும் காலத்தில் மக்களுக்கு, எந்த ஒரு பாதிப்பும் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கைபா.ஜ., சார்பில் ஒரு குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அக்குழுவில் பல்வேறு நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றியவர்களும் உள்ளனர். எங்கள் சார்பிலும் கோரிக்கைகளை, அரசுக்கு சொல்வோம்.

ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன், மாநில அரசு முழுமையாக வடிகால் கட்டமைப்புகளை சரி செய்து, வெள்ளம் வராத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தி.மு.க., அரசு அதை செய்ய தவறி விட்டது.

பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோர், தமிழக வெள்ள பாதிப்பு நிலவரங்களை கவனித்து வருகின்றனர்.மத்திய அமைச்சர் முருகனும், சென்னை முழுதும் பார்வையிட்டு, பாதிப்பு தகவல்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
16-நவ-202115:49:28 IST Report Abuse
Samathuvan அடேங்கப்பா என்ன கூட்டம் இந்த போஸ்டர்ல. அப்படியே கேமராவை இந்த பக்கமும் திருப்ப நாங்க எவ்வளவு கூட்டம் இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம். இந்த ஆளுக்கு எக்ஸெல்தான் தெரியும்ன்னு நெனச்சேன், இவருக்கு போட்டோ ஷாப்பும் நல்ல தெரியுது.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
15-நவ-202122:16:51 IST Report Abuse
sankaseshan சப்தமில்லாமல் விளம்பரம் இல்லாமல் சேவை செய்யும் பல தன்னார்வ நிறுவனங்கள் இருக்கின்றன ராமகிருஷ்ண மிஷன் RSS போன்றவை விலைக்கு போன நம்மூர் ஊடகங்கள் சொல்ல மாட்டார்கள்
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
15-நவ-202119:03:25 IST Report Abuse
P.K.SELVARAJ ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஊழல், 2016 இல் நடைபெற்ற ரெயிடில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக, விவசாயிகள் கடன் தள்ளுபடி முறைகேடு மற்றும் பல விசயங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் பிஜேபி அரசு செய்ய தவறியதற்கு என்ன காரணம் என்பதையும் கூறலாமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X