பொது செய்தி

தமிழ்நாடு

35 ஆண்டுகளுக்கு பின் பழைய மாணவர் சந்திப்பு

Added : நவ 14, 2021
Share
Advertisement
திருத்தணி : அரசு பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், பாடம் கற்பித்த ஆசிரியர்களை சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 1986ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவ- - மாணவியர் அதே பள்ளியில் ஒன்று கூடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
 35 ஆண்டுகளுக்கு பின் பழைய மாணவர் சந்திப்பு

திருத்தணி : அரசு பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், பாடம் கற்பித்த ஆசிரியர்களை சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.

திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 1986ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவ- - மாணவியர் அதே பள்ளியில் ஒன்று கூடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது மாணவர்கள் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை வரவேற்று, குரு பூஜை நடத்தி வழிபட்டனர். மேலும் ஆசிரியர்களை கவுரவித்து நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்

.இதில் சிறப்பு விருந்தினராக அப்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் அவினாசி பங்கேற்று, பழைய மாணவர்களை வாழ்த்தி பேசியும், தனது அனுபவத்தையும் எடுத்து கூறினார்.தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். இதில் பல மாணவர்கள், வருவாய், காவல், கல்வி, ஊரக வளர்ச்சி என பல்வேறு துறைகளில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதாக பழைய மாணவர்கள், தற்போதைய தலைமை ஆசிரியர் முகுந்தனிடம் உறுதி கூறினர். இதற்கான ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் குழு செய்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X