66 பேருக்கு மனை பட்டா

Added : நவ 14, 2021
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 66 பேருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட கோவிந்தவாடி, கரூர், இலுப்பப்பட்டு, ஏனாத்துார், வையாவூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள், நீண்ட காலமாகவே பட்டா கேட்டு போராடி வந்தனர்.இங்கு வசிக்கும் 100

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 66 பேருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட கோவிந்தவாடி, கரூர், இலுப்பப்பட்டு, ஏனாத்துார், வையாவூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள், நீண்ட காலமாகவே பட்டா கேட்டு போராடி வந்தனர்.

இங்கு வசிக்கும் 100 குடும்பங்களும், நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்ததால், சிங்காடிவாக்கம் கிராமத்தில் பட்டா வழங்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.ஏற்கனவே நடந்த முகாம்களில், 34 பேருக்கு பட்டா வழங்கப்பட்டதால், மீதமுள்ள 66 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில், நேற்று நடந்தது.காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, தாசில்தார் காமாட்சி ஆகியோர் பங்கேற்றனர். பயனாளிகள் 66 பேருக்கும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டன. பட்டா வழங்கியதற்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X