செய்திகள் சில வரிகளில்... சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம்

Added : நவ 14, 2021
Share
நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், 25வது வெள்ளி விழாவை முன்னிட்டும், கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், அனைத்து கிராமங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, வால்பாறை மலைப்பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட்களிலும், தொடர்ந்து, 45 நாட்கள் முகாம் நடத்த முடிவு

நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், 25வது வெள்ளி விழாவை முன்னிட்டும், கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், அனைத்து கிராமங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, வால்பாறை மலைப்பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட்களிலும், தொடர்ந்து, 45 நாட்கள் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து, ஆட்டோ வாயிலாக சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. விழிப்புணர்வு பிரசாரத்தை, வால்பாறை கோர்ட் மாஜிஸ்திரேட் கவிதா துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், ''இலவச சட்டம் உதவி குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது பிரச்னைகளை, வால்பாறை கோர்ட்டில் செயல்படும், வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவிடம் நேரில் புகார் தெரிவிக்கலாம். மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார். நிகழ்ச்சியில், வக்கீல்கள் சங்கத்தின், சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

துாய்மை பணியாளர் சென்னை பயணம்
பொள்ளாச்சி நகராட்சி துாய்மை பணியாளர்கள், சென்னையில் துாய்மை பணி மேற்கொள்ள சென்றனர். சென்னையில் தொடர் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீரை அகற்றும் பணிக்காக, அரசு உத்தரவுப்படி, பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து துாய்மைபணியாளர்கள் சென்றுள்ளனர். மொத்தம், 20 துாய்மை பணியாளர்கள், ஒரு சுகாதார ஆய்வாளர், துாய்மைப்பணி மேற்பார்வையாளர், ஓட்டுனர், ஒரு லாரியும் சென்னை நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி மற்றும் அதிகாரிகள், துாய்மை பணியாளர்களை வழியனுப்பி வைத்தனர்.
பொத்தல் ரோட்டில் சீரமைப்பு
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ஆர்ச் ரோட்டில், பாலத்தில் ஏற்பட்டிருந்த பொத்தல், சீரமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில், கோவை ரோட்டில் இருந்து, மகாலிங்கபுரத்துக்குள் நுழையும் பகுதியில், நகரின் முக்கிய அடையாளமான 'ஆர்ச்' அமைந்துள்ளது.ஆர்ச்சுக்கு கீழே, கடந்தாண்டு அமைக்கப்பட்ட ரோட்டில் சில மாதங்களுக்கு முன், பொத்தல் ஏற்பட்டது. அதை சீரமைக்காமல் விட்டதால், நாளடைவில் பெரிதாகி, விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வந்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும், பொள்ளாச்சி நகர பா.ஜ., சார்பில், நகராட்சி நிர்வாகத்துக்கு மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பலத்தில் ஏற்பட்டிருந்த பொத்தலை சரி செய்ய, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், தரை மட்ட பாலம் இருப்பதால், கான்கிரீட் தளம் அமைத்து, அதன்பின், தார் ரோடு அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.நுாலகத்தில் புத்தக கண்காட்சிஉடுமலை, கிளை நுாலகம் எண் 2ல், நுாலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய நுாலக வார விழா, பாரதியார் நுாற்றாண்டு மற்றும் நேரு பிறந்த நாள் விழா நேற்று துவங்கியது. வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார், தலைமை வகித்தார். முன்னதாக, நுாலகர் கணேசன், வரவேற்றார். பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி நுாலகர் சுப்பிரமணியன், வாசிப்பின் அவசியம், புத்தகம் படிக்கும் முறை குறித்து விளக்கிப் பேசினார்.

இதையடுத்து, பொதுமக்கள் பார்வைக்கு, புதிய நுால்களை உள்ளடக்கிய கண்காட்சியும் துவக்கப்பட்டது. வரும், 21ம் தேதி வரை, தினமும், நுால்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில், பேராசிரியர் கண்டிமுத்து, வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார், சிலம்பம் பயிற்சியாளர் வீரமணி, ஆசிரியர் விஜயலட்சுமி, அரசு மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐவர் பூப்பந்தாட்ட போட்டி

திருப்பூர் மாவட்ட அளவிலான, ஐவர் பூப்பந்து போட்டி, திருப்பூர், கொங்குமெயின்ரோடு, சின்னசாமியம்மாள் பள்ளியில், வரும், 21 ல், நடக்கிறது.ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இப்போட்டியானது, ஜூனியர், சப்ஜூனியர் என இரு பிரிவுகளில் கீழ் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுத்திறன் போட்டிகளில், தகுதிவாய்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். ஜூனியர் போட்டியில் பங்கேற்போர், 20 வயதுக்கு உட்பட்டவராகவும், சப்ஜூனியர் பிரிவுக்கு, 16 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். போட்டியில் பங்கேற்போர், ஆதார் மற்றும் பிறப்புச்சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனையர் மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெறுவர். விபரங்களுக்கு, திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்டம் சங்க பொதுச்செயலாளரை, 98945 00700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.விளையாட்டில் வென்றவர்களுக்கு பரிசுஉடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவுக்கு, தலைமையாசிரியர் கண்ணகி, தலைமை வகித்தார்.உடுமலை ராயல்ஸ் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜசுந்தரம் முன்னிலை வகிக்க, என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன், வரவேற்றார். ஆசிரியர் சந்திரன், 'நேருவின் வாழ்வும் வரலாறும்' என்ற தலைப்பில் பேசினார். லயன்ஸ் கிளப் செயலாளர் யோகானந்த், உடல் வெப்பநிலையைக் கண்டறிவதற்கான தெர்மல் ஸ்கேனர் என, பள்ளிக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதேபோல், ஏற்கனவே, ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் என பல்வேறு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டிருந்த நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இளநீருக்கு விலை நிர்ணயம்பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இளநீர் பண்ணை விற்பனை விலையை, 22 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:தமிழகம் மற்றும் வடமாநிலங்களில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையில்லாத பகுதிகளில் மட்டுமே, இளநீருக்கு தேவை உள்ளது. மேலும், தீபாவளி முடிந்து இன்னமும் புது டில்லி சென்ற லாரிகள் தமிழகம் திரும்பாததால், இளநீர் கொண்டு செல்ல போதிய அளவில் லாரிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தேவை குறைவின் காரணமாக இந்த வாரம் இளநீர் பண்ணை விற்பனை விலை, ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல், ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடைக்கு விற்பனை செய்தால் ஒரு டன் இளநீர், 8,250 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இவ்வாறு, தெரிவித்தார்.குழந்தைகள் தின விழாஉடுமலை அடுத்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழாவையொட்டி, முன்னாள் பிரதமர் நேருவின், திருவுருவ படத்திற்கு ரோஜா மலர்களை துாவி, மாணவ, மாணவியர் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் இசை நாற்காலி மற்றும் வார்த்தை விளையாட்டு ஆகியவை நடத்தப்பட்டது.போட்டியில் வென்றவர்களுக்கு, குடியரசு தினவிழாவின்போது, பரிசுகள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் கண்ணபிரான், ஊராட்சித்தலைவர் சுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X