ரோடுகளின் மையத்தடுப்புகளில் மின் விளக்கு: குழி தோண்டும் பணிகள் தீவிரம்

Added : நவ 14, 2021 | |
Advertisement
உடுமலை;நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், ரோடுகளில் மையத்தடுப்புகளில், மின்விளக்குகள் பொருத்துவதற்கான பணிகள்வேகமெடுத்துள்ளன.உடுமலை நகராட்சிக்கு, நுாற்றாண்டு நினைவாக, உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த, சிறப்பு நிதியாக, 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இதில், 5.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகரின் முக்கிய ரோடுகளில் உள்ள

உடுமலை;நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், ரோடுகளில் மையத்தடுப்புகளில், மின்விளக்குகள் பொருத்துவதற்கான பணிகள்வேகமெடுத்துள்ளன.உடுமலை நகராட்சிக்கு, நுாற்றாண்டு நினைவாக, உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த, சிறப்பு நிதியாக, 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இதில், 5.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகரின் முக்கிய ரோடுகளில் உள்ள மையத்தடுப்புகளில், மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன.இருபுறமும் ஒளிரும் வகையில், தெருவிளக்குகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மையத்தடுப்புகளில், உரிய அளவீடு மேற்கொண்டு, குழிகள் தோண்டி, மின் கம்பங்கள் அமைக்கும் பணி, வேகமெடுத்துள்ளன.இதற்காக, பாதுகாப்புடன் மின் இணைப்பு ஒயர்கள் அமைக்கப்பட்டும் வருகின்றன.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை -- பொள்ளாச்சி ரோட்டில், நகரஎல்லையான மின் மயானம்; பஸ் ஸ்டாண்ட் முதல் கொழுமம் ரோடு பிரிவு; தாராபுரம் ரோட்டில், நகர எல்லையில் இரண்டு கி.மீ., தொலைவு என, நகரின் பிரதானவழித்தடங்களில் உள்ள மையத்தடுப்புகளில் மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது.இதனால், இரவு நேரங்களில், பொதுமக்கள் அச்சமின்றி ரோட்டை கடக்க முடியும். மேலும், இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடப்பதும், சமூக விரோத நபர்களின் நடமாட்டம் குறையும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X