டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்: கிணத்துக்கடவு சங்கத்தினர் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்: கிணத்துக்கடவு சங்கத்தினர் வலியுறுத்தல்

Added : நவ 14, 2021
Share
கிணத்துக்கடவு;மேட்டுப்பாளையத்தில் இருந்து, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, திருச்சி வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சேவை குழுவினரிடம், கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர்.டில்லியில் இருந்து ரயில் பயணிகள் சேவைக்குழு உறுப்பினர்கள் சிவராஜ் கே. கண்ட்கே, ராதாகிருஷ்ணன், பிரனாய் பரூவா, நமிதா பார்பர், பாலகணபதி ஆகியோர் நேற்று

கிணத்துக்கடவு;மேட்டுப்பாளையத்தில் இருந்து, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, திருச்சி வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சேவை குழுவினரிடம், கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர்.டில்லியில் இருந்து ரயில் பயணிகள் சேவைக்குழு உறுப்பினர்கள் சிவராஜ் கே. கண்ட்கே, ராதாகிருஷ்ணன், பிரனாய் பரூவா, நமிதா பார்பர், பாலகணபதி ஆகியோர் நேற்று முன்தினம் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டு, பயணிகள், ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.இதில், தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இந்த ரயில்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய ரயில்நிலையங்கள் மூன்று கோட்டங்களிடையே அமைந்துள்ளன. குறிப்பாக, பாலக்காடு கோட்டத்திடம் சிக்கி, வசதிகளை பெற முடியாமல் தவிக்கிறது. எனவே, இவ்விரு ஸ்டேஷன்களையும் சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் வழியே சென்னை வரை இயக்க வேண்டும். இதன் வாயிலாக, கும்பகோணம் உள்ளிட்ட புனித தலங்கள், பழங்கால கோவில்கள், சிறப்பு வாய்ந்த இடங்கள், இயற்கையான பசுமை வளங்களை கண்டு களிக்க இயலும்.அதோடு, இவ்வழியாக பயணிக்க, மக்கள் தயாராக இருப்பதால், ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் பெருகும். தவிர, சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ரயில்களை, பொள்ளாச்சி வரை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X