பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்காலத்தில் பரவும் பார்த்தீனிய களை! கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுரை

Added : நவ 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் தொடர்மழையால், விளைநிலங்களில், அதிகரித்துள்ள, பார்த்தீனிய களைச்செடிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதி தென்னந்தோப்புகளில், பருவமழை காலமாகிய தற்போது, பார்த்தீனியம் களைச்செடியின் பரவல் மிக அதிகரித்துள்ளது.பயிர்களுக்கான சத்துக்களை உறிஞ்சி, வேளாண் உற்பத்தியை குறைக்கும்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் தொடர்மழையால், விளைநிலங்களில், அதிகரித்துள்ள, பார்த்தீனிய களைச்செடிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதி தென்னந்தோப்புகளில், பருவமழை காலமாகிய தற்போது, பார்த்தீனியம் களைச்செடியின் பரவல் மிக அதிகரித்துள்ளது.பயிர்களுக்கான சத்துக்களை உறிஞ்சி, வேளாண் உற்பத்தியை குறைக்கும் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த களை மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்துகிறது.வட்டார வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறியதாவது:பார்த்தீனிய களை வளரக்கூடிய விளைநிலங்களில், குறிப்பாக தென்னந்தோப்புகளில், ஆவாரை, அடர்ஆவாரை, துத்தி, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும்.இந்த செடியின் அதிக வளர்ச்சி பார்த்தீனிய செடியை வளரவிடாமல் தடுத்து விடுகிறது. பார்த்தீனியத்தை கட்டுப்படுத்துவதில், மெக்சிகன் பொறி வண்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போதுள்ள மழைக்காலமே மெக்சிகன் வண்டுகளின் உற்பத்திக்கு உகந்த காலமாகும்.கண்ணில் படும் மெக்சிகன் பொறி வண்டுகளை அதிக எண்ணிக்கையில் சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.விவசாய நிலங்களில் படர்ந்து வளர்ந்துள்ள பார்த்தீனிய செடிகளை, ஆட்களைக்கொண்டு கையுறை அணிந்து கைக்களையாக அகற்றி விட வேண்டும். ஆட்களைக்கொண்டு அகற்றும் போது வேரோடு அகற்றுவதுடன் பார்த்தீனியத்தினால் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான உபாதைகளை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.அதிகமாகவும், மீண்டும், மீண்டும் பார்த்தீனியம் வளரும் இடங்களில், உடனடியாகக் கட்டுப்படுத்த, வேளாண்துறையிடம் பரிந்துரை பெற்று, அதற்கேற்ப ரசாயன களைக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X