சில வரி செய்திகள்

Added : நவ 14, 2021
Share
Advertisement
பிரிட்டன் ராணிக்கு சுளுக்குலண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 95, கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் இரவு முழுதும் மருத்துவமனையில் கழித்த அவர், மறுநாள் அரண்மனைக்கு திரும்பினார். டாக்டர்கள் அறிவுரைப்படி அரண்மனையில் ஓய்வு எடுத்து வருகிறார். போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்ச்சி நேற்று லண்டனில்
 சில வரி செய்திகள்

பிரிட்டன் ராணிக்கு சுளுக்கு

லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 95, கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் இரவு முழுதும் மருத்துவமனையில் கழித்த அவர், மறுநாள் அரண்மனைக்கு திரும்பினார். டாக்டர்கள் அறிவுரைப்படி அரண்மனையில் ஓய்வு எடுத்து வருகிறார். போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்ச்சி நேற்று லண்டனில் நடந்தது. இதில் ராணி எலிசபெத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதுகில் சுளுக்கு ஏற்பட்ட காரணத்தால் அவர் பங்கேற்கவில்லை.

பிரிட்டனில் 'பிஷப்' ஆகும் இந்தியர்

லண்டன்: பிரிட்டனின் லோபாரோ பகுதியில் 'பிஷப்' ஆக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாதிரியார் ரெவரெண்ட் மலாயில் லுாகோஸ் வர்கீஸ், 42, என்பவரை நியமிக்க, ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டது. கேரளாவைச் சேர்ந்த இவர், அடுத்த ஆண்டு பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. இசை கலைஞர்கள் சாதனைகராகஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கராகஸ் நகரில் உள்ள ராணுவ அகாடமியில், 'எல் சிஸ்டேமே' என்ற இசைக்குழு சார்பில், ஒரே நேரத்தில் 8,097 இசைக் கருவிகள் இசைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள்.

தடுப்பூசிக்காக வெளிநாடு பயணம்

வில்லே டெல் ரோசாரியோ: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கியூபா நாட்டில் தயாரிக்கப்பட்ட 'சோபரானா' என்ற கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்த தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளாதால், தடுப்பூசி போட்டுக்கொள்ள, அண்டை நாடான கொலம்பியாவுக்கு தங்கள் குழந்தைகளோடு வெனிசுலா மக்கள் படையெடுக்கத் துவங்கி உள்ளனர்.

'அல்ஜசீரா' பத்திரிகையாளர் கைது

கார்டூம்: ஆப்ரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி உள்ளது. இதனால், நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்த 'அல்ஜசீரா' செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளரான அல்முசாலமி அல் கப்பாஷி என்பவரை, சூடான் ராணுவ வீரர்கள் கைது செய்துள்ளனர்.

நேபாளத்தில் 4 இந்தியர்கள் பலி

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்திற்கு சுற்றுப் பயணமாக சென்ற இந்தியர்கள் நான்கு பேர், இங்குள்ள ராவதாஹட் மாவட்டத்தில் நேற்று கார் ஒன்றில் பயணித்தனர். அப்போது அந்த கார், சாலையோரம் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், காரில் பயணித்த நான்கு இந்தியர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X