பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் புழுங்கல் அரிசி ஒதுக்கீடு; காத்திருக்கிறது வாணிப கழகம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
சென்னை-மத்திய அரசிடம் இருந்து, பச்சரிசிக்கு மாற்றாக கூடுதலாக புழுங்கல் அரிசி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் காத்திருக்கிறது.தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு இலவசமாக புழுங்கல் அரிசி, பச்சரிசி வழங்கப்படுகிறது. அவற்றை கார்டுதாரர்கள் தேவைக்கு ஏற்ப வாங்கலாம். ரேஷனில் வழங்க மாதம் 3.30 லட்சம் டன் அரிசி தேவை.20 சதவீதம்இதில்,

சென்னை-மத்திய அரசிடம் இருந்து, பச்சரிசிக்கு மாற்றாக கூடுதலாக புழுங்கல் அரிசி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் காத்திருக்கிறது.

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு இலவசமாக புழுங்கல் அரிசி, பச்சரிசி வழங்கப்படுகிறது. அவற்றை கார்டுதாரர்கள் தேவைக்கு ஏற்ப வாங்கலாம். ரேஷனில் வழங்க மாதம் 3.30 லட்சம் டன் அரிசி தேவை.20 சதவீதம்இதில், அன்னயோஜனா, முன்னுரிமை பயனாளிகளுக்கான, 1.91 லட்சம் டன் அரிசி கிலோ, 3 ரூபாய்; 84 ஆயிரம் டன் அரிசி கிலோ, 8.30 ரூபாய் விலையில், மத்திய அரசின் இந்திய உணவு கழகத்திடம், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாங்குகிறது

. மீதி அரிசி கிலோ 25 ரூபாய் விலையில் வாங்கப் படுகிறது.இந்திய உணவு கழகம் சார்பில், விவசாயிகளிடம் இருந்து, வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. அந்த நெல், வாணிப கழகம் மற்றும் தனியார் ஆலைகளில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள அளவிற்கு பச்சரிசி, புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷனில் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:விவசாயிகளிடம் இருந்து நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய, வாணிப கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அப்படி கொள்முதலாகும் நெல் விரைந்து அரிசியாக மாற்றப்பட வேண்டும்.தமிழக நெல்லில் ஈரப்பதம் அதிகம் உள்ளதால், விரைவாக பச்சரிசியாக மாற்றலாம். பிற மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும்

நெல்லில் ஈரப்பதம் குறைவாக உள்ளதால், புழுங்கல் அரிசியாக மாற்றுவது எளிது.வாணிப கழகம் கொள்முதல் செய்யும் நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி யானது, இந்திய உணவு கழகம் தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ள அரிசியில் ஈடுசெய்யப்படுகிறது. தமிழகத்தில் மாதம் 1 லட்சம் டன் வரை பச்சரிசி கிடைக்கிறது. அதன் தேவை, 20 சதவீதம் தான் உள்ளது.

கோரிக்கை

எனவே, தமிழகத்தில் கிடைக்கும் பச்சரிசியை பிற மாநிலங்களுக்கு ஒதுக்கி, அம்மாநிலங்களில் உள்ள புழுங்கல் அரிசியை, தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கிடைத்ததும், நெல் துரிதகதியில் கொள்முதல் செய்வதுடன், கூடுதலாக புழுங்கல் அரிசியும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X