பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : நவ 14, 2021
Share
Advertisement
தேசிய நுாலக வார விழாமணவாள நகர்: தமிழ்நாடு அரசு பொது நுாலகத் துறை சார்பில் மணவாள நகர் முழு நேர மாதிரி கிளை நுாலகத்தில் 54வது தேசிய நுாலக வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. நுாலக வளாகத்தில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சியினை நுாலக வாசக வட்டத் தலைவர் செல்வராஜ் துவக்கி வைத்தார். வரும் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள நுாலக வார விழாவில், நுாலகத்தை

தேசிய நுாலக வார விழா

மணவாள நகர்: தமிழ்நாடு அரசு பொது நுாலகத் துறை சார்பில் மணவாள நகர் முழு நேர மாதிரி கிளை நுாலகத்தில் 54வது தேசிய நுாலக வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. நுாலக வளாகத்தில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சியினை நுாலக வாசக வட்டத் தலைவர் செல்வராஜ் துவக்கி வைத்தார். வரும் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள நுாலக வார விழாவில், நுாலகத்தை சுற்றியுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்கும் ஓவியம் மறறும் கட்டுரைப் போட்டிகள் நடைபெறும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என, நுாலகர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

254 இருளருக்கு நிவாரணம்

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்தில், வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.ஒன்றிய அலுவலர் ராம்குமர், வெங்கடேசன் அறிவுறுத்தலின்படி, கடம்பத்துார் ஊராட்சி கன்னியம்மன் நகர் பகுதியில் 75 பேர், குமாரசேரி கிராமத்தில் 120 பேர், பிஞ்சிவாக்கம் கிராமத்தில் 25 பேர், செஞ்சி கிராமத்தில் 54 பேர் என, மொத்தம் 254 பேர், அரசு பள்ளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு, அரிசி, காய்கறி, துணிகள் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு, நேற்று, தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.5,000 பனை விதை நடும் பணி துவக்கம்வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் ஊராட்சி ஆண்டிதாங்கல் ஏரியில், பனை விதை நடும் நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் அஜய்குமார் பனை விதை மற்றும் மரக்கன்றுகளை நட்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:

ஊராட்சியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பல்லுயிர் பெருக்கம் செய்து, இயற்கை வளங்களை மேம்படுத்த உள்ளோம்.குறிப்பாக, ஏரிக்கரை மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில், பனை விதைகளை நடவு செய்து, குறுங்காடு உருவாக்க உள்ளோம்.அதன் துவக்கம் தான், ஏரிகளின் பனைவிதை நடுவது. எதிர்கால சந்ததியினருக்கு இது வளமை அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், விதைகள் தன்னார்வ அமைப்பு, வாலாஜாபாத் அரிமா சங்க நிர்வாகிகள், புளியம்பாக்கம் தனியார் பொறியியல் கல்லுாரி நாட்டு நல திட்டப் பணி மாணவர்கள், கிராம இளைஞர்கள், பொது மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X