பொது செய்தி

தமிழ்நாடு

மீனவ கிராமங்களை சூழ்ந்த மழை நீர் படகில் பயணிக்கும் மக்கள்

Added : நவ 14, 2021
Share
Advertisement
பழவேற்காடு ; பழவேற்காடு ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், மீனவ கிராமங்களை மழை நீர் சூழ்ந்து, அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் படகுகள் மூலம் சென்று வருகின்றனர்.ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், லட்சுமிபுரம், ரெட்டிப்பாளையம் அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுதும் பழவேற்காடு ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.ஆற்று நீர் மற்றும் பல்வேறு பகுதிகளில்
 மீனவ கிராமங்களை சூழ்ந்த மழை நீர் படகில் பயணிக்கும் மக்கள்

பழவேற்காடு ; பழவேற்காடு ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், மீனவ கிராமங்களை மழை நீர் சூழ்ந்து, அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் படகுகள் மூலம் சென்று வருகின்றனர்.

ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், லட்சுமிபுரம், ரெட்டிப்பாளையம் அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுதும் பழவேற்காடு ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.ஆற்று நீர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய்கள் மூலம் வந்தடையும் மழை நீரால் பழவேற்காடு ஏரி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

ஏரிக்கு வந்தடையும் நீர் முகத்துவாரம் வழியாக தொடர்ந்து கடலுக்கு செல்கிறது.இடமணி, பசியாவரம், ரஹ்மத்நகர், தாங்கல் பெரும்புலம் உள்ளிட்ட கிராமங்களை மழை நீர் சூழ்ந்து, அந்த கிராமங்கள் தீவாக மாறி உள்ளன.அங்குள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பழவேற்காடு வந்து செல்ல ஆபத்தான படகு பயணத்தையே நம்பி உள்ளனர்.

படகுகள் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. தண்ணீர் வடிவதற்கு, 10 நாட்கள் ஆகும் என்பதால்,மேற்கண்ட மீனவ கிராமமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X