போலீஸ் டைரி.

Added : நவ 14, 2021
Share
Advertisement
விபத்தில் வாலிபர் பலிநகரி: திருத்தணி அடுத்த, முஸ்லிம் நகரை சேர்ந்தவர் மஸ்லம் பாஷா, 27. இவர், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில், நகரிக்கு சென்றார். பின் வீடு திரும்பும் போது, இவரது இருசக்கர வாகனமும், கீளப்பட்டு அருகே எதிரே வந்த ஆர்.டி.சி., பஸ்சும் மோதிக் கொண்டன. இதில் படுகாயம் அடைந்த அவர், நகரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இது குறித்து

விபத்தில் வாலிபர் பலி

நகரி: திருத்தணி அடுத்த, முஸ்லிம் நகரை சேர்ந்தவர் மஸ்லம் பாஷா, 27. இவர், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில், நகரிக்கு சென்றார். பின் வீடு திரும்பும் போது, இவரது இருசக்கர வாகனமும், கீளப்பட்டு அருகே எதிரே வந்த ஆர்.டி.சி., பஸ்சும் மோதிக் கொண்டன. இதில் படுகாயம் அடைந்த அவர், நகரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் இறந்தார். இது குறித்து நகரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கால்வாயில் விழுந்தவர் மரணம்

நகரி: பள்ளிப்பட்டு அடுத்த, கோணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 55. இவர், நேற்று முன்தினம், ஆந்திர மாநிலம், நகரிக்கு சென்றார். வீடு திரும்பும் வழியில், பரமேஸ்வர மங்கலம் அருகே ஓடையில் முகம் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி, கால்வாயில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள்,

அவரை மீட்க முயற்சி செய்தனர் ஆனால், முடியவில்லை. உடனடியாக, பேரிடம் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து, சுப்ரமணியை சடலமாக மீட்டனர். இது குறித்து புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளி உயிரிழப்பு
மேல்நல்லாத்துார்: மணவாள நகர் அடுத்த, மேல்நல்லாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகு, 35. இவருக்கு, பிரபாவதி, 27, என்ற மனைவியும், ஏழு, 6 வயதில் இரு மகன்களும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.இவர், நேற்று மாலை, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள ஒருவரது கட்டடத்தில் கட்டட பணி செய்து வந்தார்.
அப்போது இரும்பு கேட் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்தார்.அருகிலிருந்தோர், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X