சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில் திருப்பூரில் விபத்து தவிர்ப்பு

Added : நவ 14, 2021
Share
Advertisement
திருப்பூர்-திருப்பூரில் சரக்கு ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சரக்கு ரயில் டிரைவர் சாமர்த்தியத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.திருப்பூரில் இருந்து ஈரோடுக்கு நேற்று மதியம் 1:00 மணியளவில், சரக்கு ரயில் புறப்பட்டது. 'கூட்ஸ்ஷெட் டிராக்கில்' இருந்து, ஈரோடு - திருப்பூர் வழித்தட டிராக்கை கடந்து, திருப்பூர் - ஈரோடு

திருப்பூர்-திருப்பூரில் சரக்கு ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சரக்கு ரயில் டிரைவர் சாமர்த்தியத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருப்பூரில் இருந்து ஈரோடுக்கு நேற்று மதியம் 1:00 மணியளவில், சரக்கு ரயில் புறப்பட்டது. 'கூட்ஸ்ஷெட் டிராக்கில்' இருந்து, ஈரோடு - திருப்பூர் வழித்தட டிராக்கை கடந்து, திருப்பூர் - ஈரோடு டிராக்குக்கு சரக்கு ரயில் மாற வேண்டும்.கூட்ஸ்ஷெட் டிராக்கில் இருந்து ஈரோடு - திருப்பூர் வழித்தட டிராக்கை சரக்கு ரயில் கடந்த நேரத்தில், கண்ணுக்கு தெரியும் துாரத்தில், ஈரோடில் இருந்து திருப்பூர் நோக்கி, கோவை எக்ஸ்பிரஸ், அதே டிராக்கில் வந்தது.

அதிர்ச்சியடைந்த சரக்கு ரயில் இன்ஜின் டிரைவர், சுதாரித்து தொடர்ந்து, 'ஹாரன்' அடித்தார். இதையடுத்து, கோவை எக்ஸ்பிரஸ் வேகம் குறைத்து நிறுத்தப்பட்டது. ஸ்டேஷன் அருகில் வந்ததால், ரயிலின் வேகம் ஏற்கனவே குறைவாக இருந்தது. சரக்கு ரயில் மெதுவாக, திருப்பூர் - ஈரோடு டிராக் வழியாக வெளியேறியது. அதன்பின், கோவை எக்ஸ்பிரசுக்கு, 'கிரீன் சிக்னல்' வழங்கப்பட்டது. சாதுர்யமாக செயல்பட்ட சரக்கு ரயில் டிரைவரால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X