சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு தொந்தரவு: டாக்டர் தலைமறைவு

Added : நவ 14, 2021
Share
Advertisement
கரூர்-கரூரில் பள்ளி மாணவிக்குபாலியல் தொந்தரவு கொடுத்ததாக, டாக்டர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டாக்டர் தலைமறைவாகி விட்டார்.கரூரைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த், 55; எலும்பு முறிவு டாக்டர். இவர், கரூர் பிரதட்சணம் சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். அங்கு, பசுபதிபாளையத்தைச் சேர்ந்த 38 வயது பெண், கேஷியராக பணிபுரிந்தார்.அவருக்கு

கரூர்-கரூரில் பள்ளி மாணவிக்குபாலியல் தொந்தரவு கொடுத்ததாக, டாக்டர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, டாக்டர் தலைமறைவாகி விட்டார்.கரூரைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த், 55; எலும்பு முறிவு டாக்டர். இவர், கரூர் பிரதட்சணம் சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். அங்கு, பசுபதிபாளையத்தைச் சேர்ந்த 38 வயது பெண், கேஷியராக பணிபுரிந்தார்.அவருக்கு தீபாவளி 'போனஸ்' குறைவாக கொடுத்ததால் வேலைக்கு செல்லவில்லை.

இந்நிலையில், மருத்துவமனை மேலாளர் சரவணன், 50, நேற்று முன்தினம் கேஷியரின் 17 வயது மகளை மொபைல் போனில் அழைத்து, 'தீபாவளி போனஸ், புத்தாடைகள் தர டாக்டர் ரஜினிகாந்த் வரச் சொல்கிறார்' என, கூறியுள்ளார்.அதை நம்பிய சிறுமியும் மருத்துவமனைக்கு சென்று, ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அப்போது, தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அவரது தாய், கரூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

ரஜினிகாந்த், சரவணன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த ரஜினிகாந்த் தலைமறைவாகி விட்டார். சரவணனிடம் விசாரித்து வருகின்றனர். பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி, 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X