அரசியல் செய்தி

தமிழ்நாடு

மழை நீர் வடிகால் அமைப்பதில் முறைகேடு செய்தோருக்கு...தண்டனை நிச்சயம்!

Updated : நவ 15, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை:''மழைக்காலம் முடிந்ததும், அ.தி.மு.க., ஆட்சியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க, தனி ஆணையம் அமைக்கப்படுவது உறுதி. இதில், முறைகேடு செய்தோருக்கு தண்டனை நிச்சயம்,'' என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.முதல்வர் ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வில்லிவாக்கம், திரு.வி.க., நகர், கொளத்துார் சட்டசபை தொகுதிகளில்
மழை நீர்  வடிகால் அமைப்பதில் முறைகேடு செய்தோருக்கு...தண்டனை நிச்சயம்!

சென்னை:''மழைக்காலம் முடிந்ததும், அ.தி.மு.க., ஆட்சியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க, தனி ஆணையம் அமைக்கப்படுவது உறுதி. இதில், முறைகேடு செய்தோருக்கு தண்டனை நிச்சயம்,'' என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வில்லிவாக்கம், திரு.வி.க., நகர், கொளத்துார் சட்டசபை தொகுதிகளில் ஆய்வு செய்தார்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.


சிறப்பு மருத்துவ முகாம்வில்லிவாக்கம் தொகுதி, லாக்மா நகரில் தடுப்பூசி மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து, மக்களிடம் குறைகளை கேட்டார். கொளத்துார் தொகுதியில் 70 அடி சாலை, ராஜா தோட்டம், வெற்றி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரிசி, பிஸ்கட், ரொட்டி, பாய் அடங்கிய நிவாரண பொருட்களின் தொகுப்பை வழங்கினார்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பரிமாறினார்.

பின், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:பயிர் சேத விபரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினரை, டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்த சொல்லி இருக்கிறோம். அந்த அறிக்கையை பெற்ற பின், முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ, அவற்றை நிச்சயமாக செய்வோம்.

டெல்டா மாவட்டங்களில் மொத்த கணக்கீடு வந்ததும், அதை பிரதமருக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால், தமிழக அமைச்சர்களையோ, எம்.பி.,க்களையோ டில்லிக்கு அனுப்பி, பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.


பெரிய வெற்றி

எதிர்க்கட்சிகளை பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. என் வேலை மக்களுக்கு பணியாற்றுவது தான். அதற்காகவே மக்கள் என்னை முதல்வராக தேர்வு செய்துள்ளனர்; பெரிய வெற்றியை கொடுத்தனர். நான் இன்றைக்கும் சொல்கிறேன். ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வது தான் எங்கள் கொள்கை. அந்த வழியில் என் பயணம் இருக்கும்.

எதிர்க்கட்சிகள் என்ன புகார் சொன்னாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. மழைக் காலம் முடிந்த பின், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த மழை நீர் வடிகால் பணி உட்பட அனைத்து வித ஊழல்கள் குறித்தும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பது கண்டறியப்படும். யார் குற்றவாளிகளோ, அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.இவ்வாறு முதல்வர் கூறினார்.அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் எம்.பி.,- - எம்.எல்.ஏ.,க்கள் உடன் இருந்தனர்.


பதிலளிக்க பன்னீர் மறுப்பு!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான அன்னை சத்தியா நகர், வடபழநி, எழும்பூர், புதுப்பேட்டை, துறைமுகம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதி மக்களுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நிவாரண பொருட்களை வழங்கினார்.

காசிமேடு துறைமுகத்தில் வெள்ளத்தில் சேதமடைந்த மீனவர்களின் படகுகளை பார்வையிட்ட பின் கூறியதாவது:பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை பழனிசாமியும், நானும் தனித்தனியாக வழங்கி வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. உங்களது பார்வையில் தான் தவறு உள்ளது.கன மழை, அதிக காற்று காரணமாக, மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன; அவர்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர். அரசு இதில் தனி கவனம் செலுத்தி, அவர்களுக்கான இழப்பீட்டை தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

'அ.தி.மு.க., ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளிக்க, பன்னீர்செல்வம் மறுத்து விட்டார்.


குமரியில் இன்று ஸ்டாலின் ஆய்வு

கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் சேதம் அடைந்துள்ளன.

கடந்த எட்டு நாட்களாக மழை வெள்ளப் பாதிப்புகள் மற்றும் பயிர் சேதங்களை, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். ஒன்பதாவது நாளாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு செய்யவுள்ளார். இதற்காக, சென்னையில் இருந்து இன்று காலை, அவர் விமானத்தில் துாத்துக்குடி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி பயணித்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும், மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
15-நவ-202122:54:54 IST Report Abuse
Amal Anandan அப்போ முன்னாள் அமைச்சர் வேலுமணி? அவர்தானே அப்போதும் மந்திரி.
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
15-நவ-202122:46:51 IST Report Abuse
Sathyanarayanan Subramanian ஊழலின் ஊற்று கண் தீய கட்சி. இதில் தண்டனை திமுக ஆட்சி காலத்தில் இருந்து தொடங்க வேண்டும்
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
15-நவ-202122:43:45 IST Report Abuse
s vinayak ஆணைய உறுப்பினர் பதவிக்கு போட்டியிருக்கும். டபுள் வருமானம். குருபெயர்ச்சி யோகம் யாருக்கு அடிக்கப்போகிறதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X