பால் கறக்க அனுமதிக்காத எருமை

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
போபால்:எருமை மாடு பால் கறக்க அனுமதிக்க மறுப்பதாக போலீசில் புகார் செய்த கிராமவாசியால் மத்தியப் பிரதேச மாநில போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிந்த் மாவட்டம் நாயாகவுன் அருகே கிராமம் ஒன்றில் வசிப்பவர் பாபுலால் ஜாதவ், 45. இவர் தான் வளர்க்கும் எருமை மாட்டுடன் நாயாகவுன்
 பால் கறக்க அனுமதிக்காத எருமை

போபால்:எருமை மாடு பால் கறக்க அனுமதிக்க மறுப்பதாக போலீசில் புகார் செய்த கிராமவாசியால் மத்தியப் பிரதேச மாநில போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிந்த் மாவட்டம் நாயாகவுன் அருகே கிராமம் ஒன்றில் வசிப்பவர் பாபுலால் ஜாதவ், 45. இவர் தான் வளர்க்கும் எருமை மாட்டுடன் நாயாகவுன் டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று முன் தினம் வந்தார்.

தன் எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக புகார் அளித்தார். இதனால், அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து விட்டனர். டி.எஸ்.பி., அரவிந்த் ஷா, அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, தன் மாட்டுக்கு யாரோ மாந்திரீகம் செய்து விட்டதாக கூறினார். இதையடுத்து கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசிக்கும்படி, டி.எஸ்.பி., அவருக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

இதையடுத்து மீண்டும் வந்த பாபுலால் ஜாதவ், தற்போது தன் எருமை மாடு பால் கறக்க அனுமதிப்பதாக கூறி, போலீசாருக்கு நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
17-நவ-202115:20:34 IST Report Abuse
sankar இது 'கிணத்த காணோம்' கேசவிட மோசமானதா இருக்கு - கவனிக்கவும் மிஸ்டர் வடிவேலு
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-நவ-202121:40:33 IST Report Abuse
NicoleThomson ஒரு ரேஞ்சில் தாண்டா இருக்கீங்க
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-நவ-202119:11:52 IST Report Abuse
D.Ambujavalli ‘இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைக் கண்டிருக்கிறது’ காவல்துறைக்கும் அந்த அனுபவம் வேண்டாமா ?😀
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X